பாராளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம்

438

ஜனாநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

sarath-fonseka1

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.ஏ.எஸ் குணவர்தனவின் மறைவின் பின்னர் ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

SHARE