கிராம உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றம் வாளாகத்தில் கடும் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற வீதி தற்காலிகமாக போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றவட்டாரத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
17 கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது தாம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.