பார்கின்சன்(Parkinson) நோய் எனப்படுவது மத்திய நம்புத் தொகுதியில் ஏற்படும் சிதைவுக் குறைபாடு ஆகும்.
இதனை கண்டறிவதற்கு போதியளவு மருத்துவ வசதி இதுவரைக்கும் இல்லாமலேஇருந்தது.
இந் நிலையில் தற்போது அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் புதிய வழிமுறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
இரத்த பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் குறித்த நோயைக்கண்டறியும் புதிய முறையினையே அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விற்கு அமெரிக்க அமைப்பு ஒன்றும், அவுஸ்திரேலிய அமைப்பு ஒன்றும் இணைந்து 640,000 அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்துள்ளன.
இப் பரிசோதனையானது 95 சதவீதம் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது.
எனினும் இந்த பரிசோதனை முறையானது பொது மக்களின் பயன்பாட்டிற்காக5 வருடங்களின் பின்னரே அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியாவில் 80,000 பேர் வரையானவர்களும், உலகெங்கிலும்6.3 மில்லியன் வரையானவர்களும் இந் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.