திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
இப்படத்தில் நடித்து விலகிய நடிகை மமிதா பைஜூவை பாலா அடித்ததாக தகவல் ஒன்று வெளிவந்தது. ஆனால், தன்னை இயக்குனர் பாலா அவர்கள் அடிக்கவில்லை, அப்படி எதுவுமே நடக்கவில்லை என கூறிய, அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை மமிதா பைஜூ.
பாலா இயக்கத்தில் பாலகிருஷ்ணா
இந்த சர்ச்சை எழுந்த நிலையில், மீம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. திரைப்பட விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன், தனது சமூக வலைதள பக்கத்தில் ‘பாலா இயக்கத்தில் பாலகிருஷ்ணா’ என மீம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
மேலும் இந்த கூட்டணி அமைந்தால் இருவரும் படப்பிடிப்பில் சண்டை போட்டு கொள்வார்கள் என்றும் அந்த மீம்மில் கூறப்பட்டு இருந்தது.
இதுமட்டுமின்றி பாலா இயக்கத்தில் பால்லய்யா நடிக்கும் படத்தில் சிவகுமாரை தந்தை கதாபாத்திரத்திலும், மன்சூர் அலிகானை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த மீம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது