பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல்கள் அரங்கேறியதால் இடிக்கப்பட்ட கட்டிடம்!

404

ஹாங்காங் நகரில் அமைந்துள்ள kowloonwalled city பூமியிலேயே அதிக மக்கள் வசிக்கும் இடமாக இருந்து வந்தது.

மிகவும் நெரிசல் நிறைந்த இந்த சேரிப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.

வறுமை, குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், சூதாட்டம், பாலியல் தொழில்கள், மோசமான சுகாதார பிரச்சனை மற்றும் போதுமான வசதிகள் இன்றி மக்கள் இந்த இடத்தில் வசித்து வந்துள்ளனர்.

சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் 33,000 மக்கள் வாழ்ந்து வருவதால், குற்றங்கள் நடப்பதற்கு இந்த இடம் மிகவும் வசதியாக இருந்துள்ளது.

ஹாங்காங்கில் இருந்து சீனாவிற்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சில முக்கிய சட்டவிரோதமான தொழில்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் செய்வதற்கு குற்றவாளிகள் இந்த இடத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.

பார்ப்பதற்கு குப்பை கிடங்காக காட்சியளிக்கும் இந்த இடத்தில், வறுமையின் காரணமாக தங்கள் வாழ்வாதரத்தை சுருக்கி கொண்டு மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்,

மிகவும் இருட்டான இடமாக இருப்பதால், குற்றவாளிகள் இதனை அதிகம் பயன்படுத்திகொண்ட காரணத்தால் அரசாங்கம் இந்த இடத்தினை 1994 ஆம் ஆண்டு இடித்துவிட்டு பூங்காவாக மாற்றியுள்ளது.

மேலும், இங்கு வசித்து வந்த மக்கள் ஹாங்காங் நகருக்கு குடியேறியுள்ளனர்,

இந்நிலையில், Greg Girard என்றபுகைப்படக்காரர் அப்பகுதியில் 5 ஆண்டுகளாக வசித்து, மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அரங்கேறும் குற்றங்கள் குறித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அவர் எடுத்த புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.

SHARE