பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இங்கிலாந்து எம்.பி.க்கள்: அதிர்ச்சித் தகவல்

446
இங்கிலாந்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. அந்நாட்டில் அரசியல் ரீதியாகப் பிரபலமாகியுள்ள முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகள் 10 பேர் உட்பட மொத்தம் 20 பிரபலங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர்.

உயர் பதவியில் இருப்போர், அரசியல்வாதிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சில நீதிபதிகள் மீது நீண்டகாலமாக இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது. விரைவில் இவர்கள் விசாரணையை எதிர்நோக்கக்கூடும் என்று குழந்தைப் பருவத்தில் பாதிக்கப்பட்டோரின் தேசிய அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஜான் பர்ட் இன்று தெரிவித்துள்ளார்.

குழந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பீட்டர் ரைட்டனுக்கு தண்டனை பெற்றுத்தந்த பீட்டர் மெக்கெல்வி, இந்த குற்றத்தை சக்திவாய்ந்த உயரடுக்கு மக்களின் மோசமான பாலியல் நடவடிக்கைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நாற்பதாண்டுகளாக அரசு தரப்பிலும், பிற நிறுவனங்களிலும் இத்தகைய குற்றச்சாட்டுகள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது பற்றி தனிப்பட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் தெரேசா மே தெரிவித்துள்ளார். கடந்த 1980களில் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உள்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. ஆனால் இப்போது முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றங்களை வெளிப்படுத்தி படிப்பினைகளைக் கற்றுக்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE