பல்லாண்டுகளாக வானவியல் ஆய்வாளர்கள் பெரும் கவர்ச்சி என்ற ஒன்றை குறித்து ஆராய்ந்து தங்கள் வாழ்நாட்களை செலவிட்டு வந்துள்ளதற்கு புது விளக்கம் கிடைத்துள்ளது.பூமியில் இருந்து கொண்டு வானியல் ஆய்வாளர்கள் இதுவரை 883 விண்மீன் திரள்களை கண்டுபிடித்துள்ளனர், அதுவும் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இதுவரை நாம் அறிந்து வைத்திருந்தோம்.
250 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு தொலைவில் இருக்கும் இந்த விண்மீன் திரள்கள் நமது வெற்றுப்பார்வைக்கு படுவதில்லை, ஆனால் வானியல் ஆய்வாளர்கள் இந்த தூர அளவுகள் குறித்து கணக்கிட்டு வைத்துள்ளனர். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இந்த மாபெரும் கொத்துக்கள் இதற்கு முன்னர் அடையாளம் இன்றி தொலைந்தே இருந்தது. இவை அனைத்தும் தவிர்க்கப்பட்ட பகுதியில் (Zone of Avoidance) சென்று சேர்ந்திருந்ததே இதற்கு முக்கிய காரணம். இந்த பகுதியானது வானத்தின் 20 சதவிகிதத்தை முழுமையாக மறைத்துக்கொண்டது. இப்பகுதியில் நிறைந்திருந்த தூசும் ஒளி வெள்ளம் பாச்சும் விண்மீன் திரளும் நமது பார்வையை இப்பகுதியில் இருந்து மறைத்து வந்ததே இதற்கு தவிர்க்கப்பட்ட பகுதி என பெயர் வர காரணம். இன்னும் தெளிவாக கூறுவதெனில் இந்த தவிர்க்கப்பட்ட பகுதியை ஒரு தொலைநோக்கியின் உதவியுடன் பார்வையிட்டால், அப்பகுதி இருள் மண்டிக் காணப்படும். இதனால் வானியல் ஆய்வாளர்கள் ரேடியோ தொலைநோக்கியை பயன்படுத்தி புது விண்மீன் திரள்களை கண்டறிகின்றனர். பல்லாண்டுகளாக வானவியல் ஆய்வாளர்கள் பெரும் கவர்ச்சி என்ற ஒன்றை குறித்து ஆராய்ந்து தங்கள் வாழ்நாட்களை செலவிட்டு வந்துள்ளனர். பால்வெளியை வான்வெளி வழியாக உள்ளிழுக்கும் ஒரு வகை மர்மமான ஈர்ப்பு விசை அது. புதிதாய் கண்டறிந்துள்ள இந்த விண்மீன் செறிவு வானியல் ஆவாளர்களுக்கு அந்த மர்மமான ஈர்ப்பு விசையின் மொத்த ஆற்றலும் எங்கிருந்து வருகிறது என்பதை விளக்கலாம். |