பால் பொங்கல் செய்வது எப்படி

325
பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல்

பால் பொங்கல்
தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 250 கிராம்
நெய் – 7 தேக்கரண்டி
பால் – 1 லிட்டர்
முந்திரி, திராட்சை – தேவைக்கேற்ப
சர்க்கரை அல்லது வெல்லம் – தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:

நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பச்சரிசியுடன் பால் மற்றும் 4 தேக்கரண்டி நெய் சேர்த்துக் குழைவாக வேகவைக்கவும்.

பின்னர் அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் தேவையான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கிளறவும்.

மற்றொரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து நெய்யோடு பொங்கலில் ஊற்றிக் கலக்கவும்.

இப்பொழுது சுவையான மற்றும் சுலபமான பால் பொங்கல் தயார்.

SHARE