பிக்பாஸ் நடிகை ஐஸ்வர்யா டுட்டா காதலிக்கும் நபர்

213

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா டுட்டா. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் அவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் அவரை அனைவரிடத்திலும் பிரபலப்படுத்தியது.

தற்சமயம் பிக்பாஸில் தன்னுடன் பங்கேற்ற மஹத்துடன் ஒரு படத்தில் நடித்து வரும் இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் காதலில் விழுந்த விஷயத்தை தெரிவித்திருந்தார்.

ரசிகர்களும் அது யார் என்று கேட்டு ஐஸ்வர்யாவை நச்சரித்து வரும் நிலையில் உண்மையில் அந்த நபர் நடிகர் சிம்பு தானாம். காதலை முதலில் ஐஸ்வர்யா தான் சிம்புவிடம் கூறியுள்ளார். ஆனால் சிம்புவோ தனக்கு இதில் ஈடுப்பாடில்லை என்று ஒதுங்கி கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE