பிக்பாஸ் பிறகு பிரதீப்புக்கு மாஸாக கிடைத்த மரியாதை- எங்கே சென்றுள்ளார் பாருங்க

67

 

விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ் 7. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள், புதிய விஷயங்கள் நடந்தன.

வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கட ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

அர்ச்சனா பிக்பாஸ் 7 பிறகு நிறைய நிகழ்ச்சிகள், கடைகள் திறப்பு விழா செல்வது என படு பிஸியாக இருக்கிறார்.

பிரதீப்புக்கு மரியாதை
இந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வெற்றியாளரை விட மிகவும் பிரபலமாக மக்களால் கொண்டாடப்பட்டவர் தான் பிரதீப். இவருக்கு ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது அனைவருக்குமே கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது முதன்முறையாக பள்ளி ஆண்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார் பிரதீப். அதில் பிரதீப்புக்கு ராஜ மரியாதை கொடுத்து மாஸான வரவேற்பும் அளித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் வெளியாக அவரது ரசிகர்கள் சூப்பர், வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.

SHARE