பிட்டிவெல்ல – பூஸ்ஸ கடற்பகுதியில் இருவர் கைது

292

தெற்கு கடற்படையினரால் பிட்டிவெல்ல – பூஸ்ஸ கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கிகள் இரண்டும், சிறிய ரக படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி மீன்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட சட்ட விரோத மீன் பிடி உபகரணங்களும் இத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE