பிணத்திற்கும் பணம் கேட்ட மருத்துவமனை!நோயால் உயிரிழந்த மனைவியின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சுமந்தே சென்ற சம்பவம். (வீடியோ இணைப்பு)

468

 

ஒடிசாவில் கணவர் ஒருவர், நோயால் உயிரிழந்த மனைவியின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சுமந்தே சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Kalahandi பகுதியை சேர்ந்தவர் மஜ்கி, காசநோயால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி Amang Dei (42-வயது) மாவட்ட அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

வறுமையில் இருந்த மஜ்யிடம் மருத்துவமனை ஊழியர்கள் இலவச அமரர் ஊர்திக்கு கட்டணம் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர் தனது 12 வயது மகளுடன், மனைவி உடலை சுமந்த படியே 60 கி.மீ தொலைவில் உள்ள அவரது கிராமத்திற்கு பயணித்துள்ளார்.

சுமார் 10 கி.மீ கடந்த நிலையில் உள்ளூர் ஊடகத்தை சேர்ந்தவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீதம் உள்ள 50 கி.மீ தொலைவுக்கு இலவச அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அரசால், அரசு மருத்துவமனையில் இருந்து இலவசமாக பூத உடலை கொண்டு செல்ல ‘Mahaparayana’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.

தற்போது இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது அரசு விழி திறக்க வேண்டும் என பலர் விமர்சித்து வருகின்றனர்.

 

SHARE