இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமூக விவகார அமைச்சரான பாலா ரிசிகொவை இரண்டாவது சுற்று வாக்குப்பதிவில் 349க்கு 500 ஓட்டுகள் என்ற விகிதத்தில் வென்றார். இதற்கு முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணி புரிந்துள்ள ஸ்டப், அவரது தாராளமய பொருளாதார நிலைப்பாட்டிற்கும், ஐரோப்பிய சார்பு விசுவாசத்திற்கும் பெயர் பெற்றவர் ஆவார். இவர் நேட்டோ அமைப்பிற்கான பின்லாந்து வழக்கறிஞராகவும் உள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாகவே பொருளாதார மந்த நிலையைக் கொண்டிருக்கும் பின்லாந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொடர்ந்து எட்டு காலாண்டுகளாகவே தேக்கம் அல்லது இறக்கத்தையே காட்டி வருகின்றது. கடந்த 2011ஆம் ஆண்டு கட்டய்னன் பிரதமர் பதவியை ஏற்றபோது பொது கடன் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதமாக இருந்தது. இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக் குறியீடான 60 சதவிகிதத்தையும் இது தாண்டியிருப்பதால் இவர்கள் பெருமையுடன் கருதும் டிரிப்பிள் ஏ கிரெடிட் மதிப்பீடு இவர்களுக்குக் கிடைப்பது சந்தேகமென்று கூறப்படுகின்றது.