பிரகாசத்தை இழந்த ‘ரிக் 210’ நட்சத்திரம் – நடக்கப்போவது என்ன? விஞ்ஞானிகள் குழப்பத்தில்

168

சுமார் 5 முதல் 10 மில்லியன் வயது கொண்ட ரிக் 210 என்ற நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி வருவதாக சர்வதேச விண்வெளியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரிக் 210 என்ற நட்சத்திரம் சூரியனின் பாதியளவு பிரகாசம் கொண்டதாகும்.

புவியிலிருந்து சுமார் 472 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் ரிக் 210 நட்சத்திரம் திடீரென 5.67 புவிநாட்களில் அதன் ஒளியிலிருந்து 15 சதவிகித பிரகாசத்தை இழந்துள்ளது.

சாதாரணமாக நட்சத்திரமானது பழுப்பு நிறத்திலான குள்ளமான அமைப்பை தீடிரென அடைய முடியாது என விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர்.

ஆனால் இப்படி திடீர் நிகழ்வுகள் புதிர்போல் உள்ளது எனவும் இதனால் என்ன நடக்கும் என்பது மர்மமாக உள்ளது எனவும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ட்ரேவர் டேவிட் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளன.

பொதுவாக ஒரு நட்சத்திரம் தன் பிரகாசத்தை இழக்கும் போது, அதன் பின்னாலுள்ள மற்றைய ஒளிரும் பொருட்களின் பிரகாச்தையும் மறைக்கிறது.

ஆனால் ரிக் 210 அவ்வாறான இயல்புகளை கொண்டிருக்கவில்லை. இது வித்தியாசமான நட்சத்திரங்களில் ஒன்று எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த 2015இல் இதுபோன்ற கே.ஐ.சி 8462852 எனும் நட்சத்திரம் மங்கிய நிலையை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE