பிரசவ வலிக்கும், பொய்யான வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்

308
பிரசவ வலிக்கும், பொய்யான வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்

பிரசவ வலிக்கும், பொய்யான வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்
சில நேரங்களில் பொய் வலிக்கும், உண்மையான வலிக்கும் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது கடினமாகும். பிரசவ நேரத்தில் சிலருக்கு ‘பொய் வலி’ வரும். உண்மையான ‘பிரசவ வலிக்கும், பொய்யான வலிக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. உங்களுக்கு வந்துள்ளது பொய் வலிதான் என்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை பின்வருமாறு,

1. கர்ப்பப்பை சுருங்கி விரிதலின் இடைவெளி

உண்மை வலி: உண்மையான வலியானது 30-60 வினாடிக்கு ஒரு முறை வரும். அதே போல நேர இடைவெளியும் ஒரே சீராக இருக்கும். நேரம் அதிகமாக அதிகமாக வலி குறையும்.
பொய் வலி: பொய் வலியானது உண்மை வலி போல ஒரே சீரான இடைவெளியில் இருக்காது. பொய் வலியானது எப்போதாவது வந்து போகும்.

2. வெளியேற்றம்

உண்மை வலி: பிறப்புறுப்பில் இருந்து கெட்டியான திரவம் வெளியேறும். மேலும் அதனுடன் ரத்த துளிகளும் கலந்திருக்கும்.
பொய் வலி: மேற்சொன்ன எந்த நிகழ்வும் பொய் வலியின் போது ஏற்படாது.

3. வயிற்றின் அசைவில் மாற்றம்:

உண்மை வலி : நடந்தாலோ, உட்கார்ந்தலோ, கர்ப்பையின் சுருங்கி விரிதல் தன்மையின் இடைவெளி குறையாது.
பொய் வலி : நடக்க ஆரம்பித்தாலோ, அல்லது உட்கார்ந்தாலோ கர்ப்ப பை சுருங்கி விரிவது நின்று விடும்.

4. கர்ப்பபை சுருங்கி விரிதலின் வலிமை

உண்மை வலி : உண்மை வலியின் போது சுருங்கி விரிதலின் வலிமை அதிகரித்து கொண்டே இருக்கும்.
பொய் வலி : நேரம் செல்ல செல்ல வலிமையடையாது.

5. வலி :

உண்மை வலி : உண்மை வலியானது இடுப்பின் பின்புறத்தில் உணரப்பட்டு பின் முன்புறம் வரும். மேலும் இந்த வலியானது மேலும் கீழும் நகர்ந்து கொண்டே இருக்கும்.
பொய் வலி : பொய் வலியானது அடிவயிற்றின் முன்பக்கம் மட்டுமே தெரியும்.

SHARE