பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் புத்தளத்திற்கு விஜயம்

408

ஆனமடு தேர்தல் தொகுதியின் ஆனமடு, கருவலகஸ்வெ, நவகத்தேகம பிரதேசங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆனமடுவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரதமரின் இவ்விஜயத்தின் போது கருவலகஸ்வெவ மற்றும் நவகத்தேகம  பிரதேச செயலகங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடங்கள்  நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

அத்துடன் பிரதமரின்  விஜயத்தின் போது கருவலகஸ்வெவ குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நட்டுதல், கருவலகஸ்வெவ கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நடுதல்,  கருவலகஸ்வெவ பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நடுதல், ஆனமடு உஸ்வெவ கனிஷ்ட வித்தியாலயத்திற்கான கட்டிடத்தைத் திறந்து வைத்தல், ஆனமடு நகரில் அரச ஓசுசல நிறுவனத்தைத் திறந்து வைத்தல், ஆனமடு வாராந்த சந்தையினைத் திறந்து வைத்தல் மற்றும் ஆனமடு மாவட்ட வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகளை ஆரம்பித்து வைத்தல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE