பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நுகேகொட நீதவான் சஹான் மாப்பா பண்டார நேற்று உத்தரவிட்டுள்ளார்.

302
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நுகேகொட நீதவான் சஹான் மாப்பா பண்டார நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கு எடுத்த தீர்மானம், ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பிற்கு முரணானது என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சித்ரா ஸ்ரீமனி மனதிலக்க மற்றும் மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கிங்ஸ்லி லால் பிரநாந்து ஆகியோரால் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்த போதே நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கட்சி யாப்பின் 9ஆவது சரத்திற்கமைய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்யும் முறைக்குப் புறம்பாக கட்சித் தலைமை செயல்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கவில்லை என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியின் எந்த ஒரு உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளவும் முடியாதென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

SHARE