பிரதேசத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்கு வசித்து வரும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

432
பொலிஸாரின் வீடுகளிலும் கை வைத்துள்ள கோத்தபாய – குடியிருப்புகளை இழக்கும் பொலிஸார்
கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்கு வசித்து வரும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த குடியிருப்பு தொகுதி அமைந்துள்ள இடம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு தேவையென கூறி நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார்.

பொலிஸாரின் குடியிருப்புகள் அமைந்துள்ள இந்த பகுதி ஹொட்டல் நிர்மாண திட்டத்திற்காக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் குறித்த பொலிஸ் குடியிருப்பில் வசித்து வரும் பொலிஸார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வசிக்க தேவையான மாற்று ஏற்பாடுகளோ, தற்காலிக இடங்களோ வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இவர்கள் தற்போது தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.

பொலிஸ் குடியிருப்பில் இருந்து பாடசாலைகளுக்கு சென்ற பிள்ளைகள் பாடசாலை விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது பெரும் சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என பொலிஸாரான பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

1 copy

SHARE