ஒரே மாதிரியான மனிதர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் எப்படி பெரும்பாலும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கிறதோ.. அதேபோல ஒரே விதமான மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின் சிந்தனைகளும்.. செயற்பாடுகளும் பெரும்பாலும் அதே மாதிரியாகத்தான் அமைந்திருக்கும்..
இந்த அடிப்படையை வைத்துத் தான் ஒரு மனநோயாளியை முன்பிருந்த அதே மாதிரியான ஒரு மனநோயாளியுடன் ஒப்பிட்டு அவரும் ஒரு மனநோயாளியாகத்தான் இருக்கிறார் என்பதை பல மனோதத்துவ நிபுணர்கள் ஊர்ஜிதம் செய்திருக்கிறார்கள்..
இந்த ரீதியில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து.. பரநொயிட் (Paranoid) என்ற விபரீத மனநோயால் பாதிக்கப்பட்டு.. தங்கள் மனதின் ஆழத்தில் புதைந்து கிடந்த தங்கள் கொடூர வக்கிரங்களை தீர்ப்பதற்காக கொலைவெறி தாண்டவமாடிய அந்த சர்வாதிகாரிகளும் ஒரேமாதிரியான செய்கைகளையும் நடவடிக்கைகளையும் தான் மேற் கொண்டிருந்தார்கள்..
இவர்களில் முதலாம் இடத்தை பெற்றிருப்பவர் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அச்சு அசலாக பின்பற்றிய ஜேர்மன் நாட்டின் சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லர் ஆவார்..
மனித குலமே வெறுத்து ஒதுக்கிய அந்த சர்வாதிகாரிகளில் முதலாம் இடத்தை பிடித்திருந்த அடொல்ஃப் ஹிட்லரை தனது முன்னோடியாக கொண்டு.. தான் உருவாக்கிய விடுதலை இயக்கத்தை அவரது இராணுவ அமைப்பின் பிரதியாக பிரபாகரன் அமைத்துக் கொண்டார் என்றால் அவர் எப்படிப்பட்ட ஒரு மனநிலை கொண்டவராக இருந்திருப்பார் என்பதை இங்கே நான் விளக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்..
அடொல்ஃப் ஹிட்லரின் அதே செயல்பாடுகளை பின்பற்றிய பிரபாகரன் உட்பட.. இடி அமின்.. பொல்பொட்.. பெனிட்டோ முசோலினி.. சதாம் ஹுசைன்.. யோசப் ஸ்ராலின் போன்றோர் தங்கள் ஆட்சிக் காலத்தில் மிதமிஞ்சிய கொலை வெறியுடன் செயல்பட்டு
அர்த்தமற்ற யுத்தங்களையும்.. அநியாயப் படுகொலைகளையும் செய்து.. இறுதியில் தங்கள் மரணத்தை தாங்களே வரவழைத்துக் கொண்டதற்கு காரணம் அவர்களை பீடித்திருந்த (Paranoid) என்ற மனோ வியோதியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை அவர்களது வாழ்க்கை வரலாறுகளை மருத்துவ ரீதியில் ஆராய்ந்த பல மனோதத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்..
அவர்களை போலவே பிரபாகரனும் அதே சிந்தனைகளுடன்.. அதே நோக்கங்களுடனும்.. அதே செயல்பாடுகளுடனும் தன் வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து வந்தார் என்பதை அவரது வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ந்து பார்க்கும்போதும் தெரிய வருக்கிறது..
அது மட்டுமல்ல பிரபாகரனும் அவர்களை போலவே தனது மரணத்தை தானே வரவழைத்து கொண்டதிலிருந்து அவரும் நிட்சயம் பரநொய்ட் என்ற இந்த சித்தப் பிரேமை நோயினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுவதற்கு இடமுண்டு…..
அந்த பழைய சர்வாதிகாரிகளை இந்த மனநோய் பீடித்திருந்தற்கு காரணம்.. அளவுக்கு மீறிய அச்சம் என்று பொருள்படும் ஃபோபியாக்கள்தான் (Phobias) காரணம் என்பதுதான் மனோதத்துவ நிபுணர்களின் கருத்தாகும்..
இந்த அர்த்தமற்ற பயங்கள்தான் இவர்களை இப்படி ஆட்டிப்படைத்து இப்படிப்பட்ட மனநோய்க்குள் தள்ளியிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த அளவுக்கு மீறிய ஃபோபியாக்கள் சுமார் 136 வகையை சேர்ந்தவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.. இவற்றில் இந்த சர்வாதிகரிகளை பெரும்பாலும் பாதித்திருந்தது மூன்று வகையான அச்சங்களே..
முதலாவது பொதுவாக எந்த மனிதர்கள் மேலும் ஏற்படும் காரணமில்லாத அச்சமும் சந்தேகமும் அடங்கிய அந்திரோஃபோபியா (Anthrophobia)
இரண்டாவது தன்னை எந்த வேளையிலும் எவராவது கொன்று விடுவார்களோ என்ற அச்சமாகிய ரொக்சிபோபியா (Toxiphobia).. மூன்றாவது எந்த வேளையிலும் தான் இறந்து விடுவேனோ என்ற அச்சமாகிய தன்ரோஃபோபியா (Thantophobiya) என்று மனோதத்துவ வல்லுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த பயங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் பலருக்கும் ஏற்படக் கூடிய ஒன்றுதான்.
ஆனால் இவைகள் அவர்களில் நிரந்தரமாக தங்கியிருப்பதில்லை.. ஏதோ வந்தோமா சென்றமோமா என்ற பாணியில் ஒருசில காலம் மட்டும் இருந்து விட்டு விலகிச் சென்று விடுகிறது.
எனினும் ஒரு சிலரில் மட்டும் இவைகள் நிரந்தரமாக தங்கியிருந்து விருத்தியடைய தலைப்படுவதால்தான் அவர்கள் பரநொய்ட் என்னும் இந்த தீவிர மனநோய்க்குள் தள்ளப்படுகிறார்கள்.
அப்படி தள்ளப்படும் போது அவர்கள் சாதாரணமான மனித குணங்களுக்கு அப்பாற்பட்டு.. ஒரு வித்தியாசமான பயங்கர மனிதர்களாக மாற்றமடைகிறார்கள்..
இதற்கு உதாரணங்கள்தான் பிரபாகரன் உட்பட மேற் கூறப்பட்டிருக்கும் சர்வாதிகாரிகள்.. இந்த சர்வாதிகரிகளின் ஆரம்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால்.. இவர்கள் எவருமே தங்கள் கல்வியை சரியான முறையில் முடித்து அவற்றில் தகைமை அடையாதவர்கள்.
இவர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கேற்ற போதிய அறிவோ.. முதிர்ச்சியோ அல்லது அனுபவமோ ஏற்பட்டிராத தங்கள் இளமை பருவத்தில் அரசியலில் காலடி பதித்து..
தலைமை என்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த அந்த பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேகத்தில் அதை அடைவதற்காக.. தங்களுக்கு போட்டியாக இருப்பவர்கள் என்று தாங்கள் கருதுபவர்களை போட்டுத் தள்ளி.. தங்கள் இஸ்டப்படியெல்லாம் தாறுமாறான வழிகளில் நடந்து.. தேவையற்ற பல மனிதப் பேரழிவுகள் உருவாக காரணமாய் இருந்திருக்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக நிராயுதபாணியான ஒரு சிலரை மட்டும் போட்டுத் தள்ளி இவர்கள் பிரபல்யம் அடைந்திருக்கலாம்.
ஆனால் இவர்களால் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அது போர்க்களங்களை காண வேண்டிய ஒரு நிலை ஏற்படும்போது இவர்கள் அந்த போர்க்களங்களில் நின்று நேருக்கு நேர் போர் செய்ய சற்றும் துணிச்சலற்ற பயந்தாங் கொள்ளிகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இவர்களது வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ந்து பார்க்கும்போது தெரிய வருகிறது..
(பிரபாகரன் உயிருக்கு பயந்து பதுங்கியிருந்த பங்கர் மாளியையின் வாசல்..)
வாய் வீரம் மட்டும் பேசி தங்கள் வாழ்நாளில் மக்கள் மத்தியில் மாவீரர்களுக்குரிய இமேஜுடன் பவனி வந்த இந்த சர்வாதிகாரிகள் அனைவருமே பெரும்பாலும் பிரபாகரனைப் போலவேதான் தங்கள் வாழ் நாட்களில் தங்கள் உயிருக்கு பயந்து மிகவும் பாதுகாப்பு நிறைந்த சூழ்நிலையில் தங்கள் வாழ் நாட்களை கொண்டு சென்றிருக்கிறார்கள்..
இன்று பிரபாகரனை ஒரு நெப்போலியனுக்கு நிகராக.. ஒரு மகா அலெக்ஸ்சாணடருக்கு நிகராக.. ஒரு சாம்ராட் அசோகனுக்கு நிகராக.. ஒரு சத்திரபதி சிவாஜி மகாராஜிற்கு நிகராக.. ஒரு ராஜராஜ சோழனுக்கு நிகராக.. பேசுபவர்கள் ஒன்றை மட்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. இந்த மாவீரர்கள் அனைவரும் தாங்கள் வெற்றிகரமாக நடத்திய போர்கள் அனைத்திற்கும் பெரும்பாலும் தாங்களே தலைமை தாங்கி போர் களங்கள் கண்டார்கள்..
நெப்போலியன் படை
ஆனால் மனப் பயங்கள் நிறைந்த ஃபொபியாக்களால் பீடிக்கப்பட்டிருந்த ஹிட்லரை போலவோ அலலது பிரபாகரனை போலவோ பங்கர்களில் பதுங்கியிருந்து கொண்டு தங்கள் கட்டளைகளை பிறப்பித்தவர்கள் அல்ல அவர்கள்.
ஒரு குதிரையில் இருந்து கொண்டு போர் செய்து கொண்டிருக்கும் போது அந்த குதிரை களைத்து விட்டது என்றால்.. அதிலிருந்தபடியே இன்னொரு குதிரைக்கு தாவி அந்த யுத்தங்களின் இறுதிவரை யுத்த களத்தில் நின்று தீரத்துடன் போரிட்டவர்கள்.
குதிரைகள் களைத்தாலும் தாங்கள் மட்டும் களைக்காமல்.. சளைக்கலாமல் போரிட்ட வீர வரலாறு அவர்களுடையது ஆனால் பிரபாகரனின் வீர வரலாறு?…
போர்க்களங்களில் இவர்கள் மாவீரத்திற்கு அத்தாட்சியாக இவர்கள் உடல்கள் எங்கிலும் விழுப் புண்கள் ஏற்பட்டிருந்தன.
ஆனால் பிரபாகரனுக்கு எந்த போர்க்களங்களிலாவது தடக்கி விழுந்த ஒரு புண்ணின் அடையாளமாவது இருக்கிறதா?
இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் வீரத்தின் அடையாளமாக அந்த வீரத் தழும்புகளை சுமந்தார்கள்.. ஆனால் பிரபாகரனின் உடலில் ஒரு ஈர நுழம்பை சுமந்த அடையாளமாவது இருக்கிறதா?..
ஆம் பிரபாகரனோ.. ஹிட்லரோ.. இடி அமினோ.. அல்லது சதாம் ஹுசைனோ.. பெனிட்டோ முசோலினியோ.. அல்லது யோசப் ஸ்ராலினோ தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் உயிரை பாதுக்காத்துக் பாதுகாத்துக் கொள்வதிலேயே தங்கள் பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்கள்.
தாங்கள் வழி நடத்திய அந்த அர்த்தமற்ற யுத்தங்களில் கலந்து கொள்ளாமல் வெறும் கோழைகளாக எங்கோ பாதுகாப்பாக பதுங்கியிருந்து கொண்டு.. பிறரை மட்டும் அவற்றில் ஈடுபடுத்தி.. அவர்களை பலி கொடுத்து.. தங்கள் உயிரையும் பதவியையும் காப்பாற்றிக் கொண்டார்கள் என்பதுதான் அவர்கள் வரலாறு..
இவைகளுக்கு காரணம் இவர்கள் ஆழ்மனதை பாதித்திருந்த பலவித பயப் பிராந்திகள் அடங்கிய அந்த பொல்லாத ஃபோபியாக்களின் விருத்தியால் (Phobias) ஏற்பட்டிருந்த சித்தப் பிரேமை என்னும் பரனொய்ட் (Pharanoid) என்னும் தீவிர மனநோய்தான்..
நேரத்து நேரம் தங்கள் இருப்பிடங்களை மாற்றுவதும்.. தாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் பாதைகளை மிக இரகசியமாக வைத்திருப்பதும்.. சில வேளைகளில் அதை இறுதி நேரத்தில் மாற்றியமைப்பதையும் அவர்கள் அன்றாட வழக்கமக இருந்து வந்தது.
ஹிட்லர்.. சதாம் ஹுசைன்.. முசலோனி.. இடி அமின்.. யோசப் ஸ்ராலின் போன்றோரின் மாளிகைகளில் பல படுக்கை அறைகள் இருந்தன.
இவைகளில் அன்றிரவு அவர்கள் எங்கே உறங்கப் போகிறார்கள் என்பது இறுதி நிமிடம் வரை பாதுகாக்கப்படும் பரம இரகசியம்.
அதே போல பிரபாகரனுக்கும் வன்னிப் பிரதேசத்தில் பல பங்கர்கள் இருந்தன.. அதில்கூட அவர் அன்றிரவு எந்த பங்கரில் தங்கப் போகிறார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த இரகசியமே.
இவர்களின் வாழ்ந்த காலங்களில் இவர்களின் குணநலங்களையும்.. இவர்களின் வித்தியாசமான சிந்தனைகளையும்.. தந்திரம் நிறைந்த விசித்திரமான செயல்பாடுகளையும் வைத்து இவர்கள் மனநோயாளர்கள்தான் என்பதை நிரூபிப்பதற்கு முன்னர் இவர்கள் மரணத்தை உறுதியாக சந்திக்கத்தான் வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது.. அந்த இறுதி நிமிடங்களில் இவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன என்பதை முதலில் பார்ப்போம்…
இந்த சர்வாதிகாரிகள் அனைவரும் பொதுவாக உயிருக்கு பயந்தவர்கள் மட்டுமல்லாது, தங்கள் தலைமையை இன்னும் பெரிதாக ஊதிப் பெருதாக்கி மக்கள் மத்தியில் தங்களை பெரிய வீராதி வீரார்களாக.. தீராதி தீரார்களாக காட்டிக் கொள்வதற்காக தங்கள் தாறுமாறான சிந்தனைகளால் ஏடாகூடாமாக எதையாவது செய்து அதில் மாட்டிக் கொள்ளாமல் அதிஸ்டவசமாக பல தடவைகள் தப்பியிருந்தாலும்.. இறுதியில் இப்படியான ஒரு ஏடாகூடாமான செய்கை ஒன்றுதான் அவர்கள் உயிருக்கே உலை வைத்திருக்கிறது என்பதை இவர்களின் ஒரே மாதிரியான முடிவுகளை பார்க்கும்போது தெரிய வருகிறது…
முதலில் பிரபாகரனை எடுத்துக் கொள்வோம்.. முந்திய அரசாங்கங்களை தென்னிலங்கை குண்டு வெடிப்புகளாலும்.. மனித வெடி குண்டுகளாலும் அச்சுறுத்தி அவர்களை வன்னிக்குள் காலடி பதிப்பதை சிம்ம சொப்பனமாக எண்ண வைத்து.. அவர்களை முடக்கி.. வன்னி மக்களை அடக்கி.. அவர்கள் பிள்ளைகளை தனது படுகொலை தாண்டவங்களுக்கு பலி கொடுத்து..
வெளிநாட்டுப் புலிகளையும் அவரது ஆதரவார்களையும் சிலிர்ப்பூட்டுவதற்காக தினம் பல படுகொலைகளை நடத்தி அவர்கள் மத்தியில் தன்னை ஒரு மாபெரும் வீரனாக காட்டிக் கொண்ட பிரபாகரன்.. தனது சண்டித்தனத்தின் உச்சகட்டமாக மாவிலாறை பூட்டி தனது அதி புத்திசாலித்தனத்தை காட்ட போய் தான் வசமாக மாட்டிக் கொண்டார்..
பிரபாகரனின் இந்த முட்டாள்தனமான நடவடிக்கையால்.. தமிழ் விவசாயிகள் மட்டுமல்லாது சிங்கள விவசாயிகளுக்கும் பலனளித்து வந்த மாவிலாறை திறக்க வேண்டிய கட்டாயத்திற்குள் இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது.
வேறு வழியில்லாமல் மகிந்தாவின் அரசு தனது இராணுவ நடவடிக்கையின் மூலம் மாவிலாறை திறக்க எடுத்த முயற்சி படிப்படியாக முன்னேறி இறுதியில் முள்ளி வாய்க்கால் வரை வந்து நின்று.. பிரபாகரனுக்கு முடிவு கட்டி முற்றுப் புள்ளி வைத்தது.
இதே போலத்தான் உகண்டாவின் தாதாவான சர்வாதிகாரி இடி அமின்.. தனது சண்டித்தனங்களின் உச்ச கட்டமாக அண்டை நாடான தான்சானியாவைவையும் உகண்டாவுடன் வளைத்துப் போட்டு அந்த நாட்டு மக்களுக்கும் தானே தலைவராக இருக்க எண்ணினார்..
.. இடி அமினும் தனக்கு தானே டடா (DADA) அதாவது தந்தை பட்டம் சூட்டி உகண்டா மக்களின் நேசத்திற்குரிய தேசத் தந்தையாக இருக்க விரும்பினார்.. ஆனால் அவருக்கு “டடா” என்ற பெயரை விட “தாதா” என்ற அந்த சேரித் தமிழ் சண்டியப் பெயரே சாலப் பொருந்துவதாக இருந்தது)
இவருடைய முட்டாள்தனமான இந்த செய்கையின் ஆபத்தை உணர்ந்த அவரது மந்திரிகள் பலர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பியோடி மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.
ஜனவரி 1979 ம் ஆண்டு உகண்டா இராணுவம் லிபியா அதிபர் கேணல் கடாஃபியின் மறைமுக ஆதரவுடன் தான்சானியாவுக்குள் காலடி எடுத்து வைத்தபோது.. தயாராக இருந்த தான்சானியா இராணுவம் இடி அமினின் இராணுவத்தை புரட்டியெடுத்து விரட்டியடித்தது..
இடி அமினின் அக்கிரமம் முற்றிவிட்டது இத்துடன் இவரை அறுவடை செய்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது படைகளை உகண்டாவுக்குள் தைரியமாக அனுப்பிய தான்சானியா.. அமினின் இராணுவத்தை கொன்று குவித்து.. அடக்கி ஒடுக்கிஉகண்டாவை கைப்பற்றி அதை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
தேசத்தை நேசிக்கும் ஒருவராக தன்னை காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி பிழைத்து வந்த அமின்.. இனி தேசமாவது கத்தரிக்காயாவது என்று அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு.. ஏப்பிரல் 11 ம் திகதி 1979 ம் ஆண்டு ஒரு உலங்கு வானூர்தி மூலம் லிபியாவிற்கு தப்பி சென்று அங்கிருந்து 1980 ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு இடம் பெயர்ந்து.. 20 ஜூலை 2003 ம் ஆண்டு ஆருமற்ற ஒரு அனாதையை போலவே அரேபியாவில் மரணமடைந்தார்..
உகண்டாவில் அமினின் காலை கழுவி அண்டிப் பிழைத்த சிலர்.. இதோ அவர் திரும்பவும் வந்து விடுவார் உகண்டாவில் சிறந்த (?) ஆட்சியை மீண்டும் தரப் போகிறார் என்றெல்லாம்.. இன்று வெளி நாடுகளில் தமிழீழ பேய்க்காட்டி பிரபாகரப் பிழைப்பு நடத்தி வந்த சில புலிப் பினாமிகள் இன்று பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. அவர் அதோ வருகிறார்.. இதோ வந்து கொண்டிருக்கிறார் என்று பூச்சாண்டி காட்டி.. புலுடா விடுவதை போல அவர்களும் விட்டுப் பார்த்தார்கள்..
ஆனால் அமினின் அக்கிரம ஆட்சியால் அல்லாடிப் போயிருந்த உகண்டா மக்கள் மக்களோ இந்த புலுடாக்களுக்கெல்லாம் கடுகளவு கூட மசிந்து கொடுக்கவில்லை.
மாறாக அமின் நாட்டுக்கு திரும்பி வந்தால் அவரை கூறு போடுவதற்கு கத்தி கோடரி மண்வெட்டி சகிதம் உகண்டா மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருந்தால்.. நாளடைவில் அந்த வதந்திகள் யாவும் ஓய்ந்து ஒழிந்து போய் விட்டன.
இறுதியில் அவரது இறந்த உடலையாவது உகண்டாவிற்கு கொண்டு செல்ல அவரது மனைவி முயற்சித்தார்.. ஆனால் அந்த உடலை அங்கே அடக்கம் செய்யவதற்க்கு கூட உகண்டா மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தான் தெரிவித்தனர்.
முடிவில் சவுதி அரேபியாவிலே ஒருசில குடும்ப அங்கத்தவர்கள் மட்டுமே அவரது இறுதி அடக்கத்தில் கலந்து கொண்டார்கள்..
தலைவர் பிரபாகரன் எல்லா அரசாங்களிடமும் வாலாட்டி அவர்களை வெருட்டி கடைசியில் மகிந்தவை ஜெனாதிபதியாக்கி, தனக்குதானே குழி பறித்து மாட்டிக் கொண்டது போல..
அடோல்ஃப் ஹிட்லரும் ஆரம்பத்தில் சும்மா ஏனோ தானோ என்றிருந்த அப்பாவி போலந்தை ஆக்கிரமித்து தனது சண்டித்தனத்தை காட்டி அதை வளைத்து போட்டு தன்னை மாவீரனகாக காட்டிக் கொண்டு..
அடுத்து இங்கிலாந்து பிரான்சு என்று அடிதடியில் இறங்கி.. இறுதியில் ரஸ்யாவில் கைவைக்கப் போய் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டார்.
அவேசமாக சுமார் ஆறு கோடி இராணுவ பலத்துடன் ஜேர்மனியை நோக்கி களமிறங்கிய ரஸ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகி.. ஹிட்லர் பதுங்கியிருந்த பேர்லின் பங்கர்வரை முன்னேறி.. அவருக்கு முள்ளி வாய்க்கால் முடிவை கொடுத்து ஓய்தது ரஸ்யா.
அதே போல இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியை எடுத்துக் கொண்டால்.. அவர் 1938 ம் ஆண்டிலே அடொல்ப் ஹிட்லரின் பாசிச சர்வாதிகார அமைப்பை தனது ஆட்சியிலும் நுழைத்து தானே இத்தாலியின் ஏகபோக தலைவராக இருக்க எண்ணினார்.. அடொல்ஃப் ஹிட்லரின் அதே சல்யூட் முறையை பிரபாகரனுக்கு முன்பே தன் ஆட்சியியில் நுழைத்த பெருமைக்குரியவர் இவர்..
இந்த அதிமேதாவி பல அடி முட்டாள்தனமான தனது நடவடிக்கைகைளில் இருந்து அதிஸ்டவசமாக பல முறை தப்பியிருந்தாலும்.. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுக்கு எதிராகப் போரிடப் போய் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டார்..
இனி தான் பிடிபட்டால் தனது விதி அதோ கதிதான் என்பதை உணர்ந்து கொண்ட அவர் 1945 ம் ஆண்டு தனது மனைவியுடன் சுவிட்சர்லாந்துக்கு தப்பியோட முயற்சித்து இத்தாலியில் அவருக்கு எதிராக ரகசியாமாக செயல்பட்டு வந்த பார்ட்டிசான்கள் (Partisans) என்று அழைக்கப்படும் மக்கள் புரட்சி இயக்கத்தினரால் பிடிக்கப்பட்டு ஏப்ரல் 28, 1945 ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது ஆட்சிக் காலத்திலேயே இவருக்கு எதிரானவர்கள் இவரை போட்டுத் தள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளிலிருந்து இவர் பல தடவைகள் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.. அதில் 7 ஏப்ரல், 1926 வையலட் ஜிப்சன் என்பவன் (Violet Gibson) துப்பாக்கியால் சுட்டதில் அவர் மூக்கில் காயம் ஏற்பட்டது..
பின்னர் 31 ஒக்ரோபர் 1926 ம் ஆண்டு அன்ரியோ ஸம்போன் (Anteo Zamboni) என்ற ஒரு 15 வயது சிறுவன் ஒரு கொண்டாட்ட அணிவகுப்பில் முசோலினையை சுட்டுக் கொல்ல முயன்றது குறிப்பிடத் தக்கவைக்கள்.
ஒரு 15 வயது சிறுவனையே பாதிக்க கூடிய அளவுக்கு முசோலினியின் ஆட்சி முறை இருந்ததென்றால் அது எப்படிப்பட்டதொன்றாக இருந்திருக்கும் என்பதை நான் விபரிக்க தேவையில்லை என்று எண்ணுகிறேன்.
அவன் ஒரு சிறுவன் என்றும் பாராமல் அவனை அன்றே முசோலினியின் இராணுவம் ஈவிரக்கமில்லாமல் சுட்டு கொன்றது வேறு விசயம்..
(Mussolini, centre (இறைச்சி தொங்க விடப் பயன்படும் கொளுக்கிளில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட Mussolini உடல்.)
முசோலினி சுட்டுக் கொல்லப்பட்ட மறுநாள்.. பொதுமக்கள் பார்வைக்காக ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையத்தின் முன்பாக தலை கீழாக தொங்க விடபட்ட போது.. ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அங்கே கூடி நின்று அவர் உடல் மீது கல்லெறிந்து அதை சின்னா பின்னப்படுத்தி தங்கள் ஆத்திரத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
அத்துடன் அடங்கி விடவில்லை அவர்கள் ஆத்திரம்.. அந்த உடல் கீழே இறக்கப்பட்ட பின்பும் அந்த உடல் மீது பலர் சிறுநீர் கழித்து தங்கள் அடக்க முடியாத ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார்கள்..
இதே போல ஈராக்கில் அக்கிரம ஆட்சி நடத்திய சர்வாதிகாரி சதாம் ஹுசைனும் தனது அதி மேதாவித் தனத்தினால் ஈரானுடன் போர் தொடுத்தபோது.. அவருடன் உள் நோக்கம் கருதி ஆயுத உதவிகள் புரிந்த உலகின் சோளியன் குடும்பி அமெரிக்காவே.. சதாம் ஹுசைன் அண்டை நாடான குவைத்தை 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வளைத்துப் போடும் முயற்சியில் இறங்கியதை சாட்டாக வைத்து ஈராக்கிற்குள் நுழைந்த அது அவருக்கு ஒரு நல்ல முள்ளி வாய்க்கால் முடிவை ஏற்படுத்த முடிவு கட்டியது..
அமெரிக்க இராணுவத்திடன் இருந்து தனனை பாதுகாக்க தனது சொந்த நகரமான ரிக்கிறிட்டில் (Tikrit) நிலத்தடியில் நிலவறை ஒன்றுக்குள் ஒழித்துக் கொண்டார் அந்த பயந்தாங் கொள்ளி.. ஆனால் 13 ம் திகதி டிசம்பர் மாதம் 2003 ம் ஆண்டு அவருடைய சொந்த நகரத்தவர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு அவர் அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டார்.
பிறகென்ன கோர்ட் விசாரணை அது இது என்று மூன்று வருடங்களை கடத்தி.. ஈராக்கின் ரென்சனை சற்று தளர்த்திய பின்னர்.. தான் நினைத்திருந்தபடியே அவரை அவரை 2006 ம் ஆண்டு டிசம்பர் 30 ம் திகதி தூக்கில் தொங்கவிட்டு அழகு பார்த்தது அது..
ஆம் உலகில் சர்வாதிகாரப் போக்கை தமது கையில் எடுத்து பாசிச ஆட்சியை அமுல் படுத்த முயன்ற இந்த ஒவ்வொரு மனநோயாளிகளின் வாழ்க்கையும் இப்படித்தான் முற்றுப் பெற்றது…
இந்த சர்வாதிகாரிகள் தங்களுடன் கூடவிருந்தவர்களையே தங்கள் உயிருக்கு ஆபத்தானவர்கள் என்று கருதி அவர்கள் தந்திரமாக கொன்றொழித்திருக்கிறார்கள்.
இப்படி பிரபாகரனுடன் கூட இருந்து மக்களால் மாவீரகளாக மதிக்கப்பட்ட இருவரில் பிரபாகரனின் அடுத்த ஸ்தானத்தில் உலகறிந்த விசயம்..
ஜோசப் ஸ்டாலின்
அதேபோல யோசப் ஸ்ராலினும் தனது சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் பல கோடிக் கணக்கான தனது மக்களையே கொன்று குவித்தவர்தான்.
ரஸ்யாவின் ஒரு பகுதியாயிருந்த உக்கரேன் நாட்டு மக்களின் மேல் கொண்ட வெறுப்பினால்.. உணவுத் தடை விதித்து அவர்களில் சுமார் 4 கோடி மக்களை பட்டினி போட்டே கொன்றவர் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை அவர் மேல் இருந்து வருகிறது.
அவரையும் விட்டு வைக்கவில்லை அந்த சதி என்ற விதி.. அவரது இறுதிக் காலத்தில் சுமார் 74 வது வயதை அவர் எட்டி விட்ட நிலையில்.. அவரது நம்பிக்கைக்குரிய ஜெனரல்களாலேயே நஞ்சூட்டப்பட்டுதான் கொலை அவர் செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மை அண்மையில் நீரூபிக்கப்பட்டிருக்கிறது.
எவரிலும் நம்பிக்கை வைக்காத அவர் தனிமையில் வசித்து வந்த சூழ் நிலையில்.. மார்ச் முதலாம் திகதி 1953 ம் ஆண்டு ஒரு இரவு விருந்தில் கலந்து விட்டு வீடு திரும்பிய அவர் இருதய கோளாறினால் இறந்தார் என்று கூறப்பட்ட போதிலும்..
அவர் கடைசியாக கலந்து கொண்ட விருந்தில் அவர் அருந்திய வைனில் உருசியும் மணமுமற்ற ஒருவித எலி பாஷாணம் கலந்து கொடுக்கப்பட்டிருந்ததை 2008 ல் அவரது உடல் திசூக்களை ஆராய்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருந்தார்கள்.
எனினும் மேற் கொண்டு இந்த விடயத்தை கிளறுவதால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தால் அந்த விடயம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
சர்வாதிகாரிகளின் மரணங்கள் யாவும் அவர்கள் செய்த கொடூரங்கள் போன்று கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.