இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் 7-ம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் தாகுதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் 90 வயதான எஸ்தர் குனியோ என்ற மூதாட்டி ஒருவர் ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து சாதுர்யமாக உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இது தொடர்பில் 90 வயதான எஸ்தர் குனியோ என்ற மூதாட்டி கூறியதாவது,
கடந்த ஒக்டோபர் மாதம் தன் வீட்டிற்குள் 2 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது நான் அர்ஜென்டீனாவை சேர்ந்தவர் என கூறினேன். அதற்கு அர்ஜென்டினா என்றால் என்ன? என கேட்டனர்.
கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபல வீரர் லியோனல் மெஸ்ஸியின் சொந்த ஊர்தான் எனது ஊர் எனக் கூறினேன்.
அதனை கேட்டதும் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் ‘செல்பி’ புகைப்படம் எடுத்தனர். மேலும் என்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டனர் என்று அவர் கூறினார்.