பிரபாகரனின் மகன் எதிர்பாராத விதத்தில் குரோஸ் ஃபயர் மூலம் உயிர் இழந்தான் போரின் போது சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்ணீர் வடித்த மகிந்த ராஜபக்ச -திட்டமிட்டு கொல்லப்பட்டதை மறைக்கும் மகிந்த தரப்பு

23

 

பிரபாகரனின் மகன் எதிர்பாராத விதத்தில் குரோஸ் ஃபயர் மூலம் உயிர் இழந்தான்
போரின் போது சுட்டுக்கொல்லப்பட்டதற்கு
கண்ணீர் வடித்த மகிந்த ராஜபக்ச -திட்டமிட்டு கொல்லப்பட்டதை மறைக்கும் மகிந்த தரப்பு
இதன் கானொளி உள்ளது பிஸ்கட் கொடுத்து பின்னர் கொலை செய்யும் காட்சி
தனது தகப்பன் கவலைப்பட்டதாக சமூக ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த நார்மல் ராஜபக்ச
அப்பட்டமான பொய்யை கூறியிருப்பது
பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது
அவரை பாதுகாத்த மெய்ப்பாதுகாவலர் கள்
குமணன் கடற்புலி கப்டன்
விக்னேஸ் இம்ரான் பான்டியன்
துவாரகன் இம்பிரான் பாண்டியன்
அரசு இம்ரான் பான்டியன்
இவர்கள் உடலங்கள்
கண்டுஎடுக்கப்பட்டன
உறுதிப்படுத்தப்படது
53 வது படைப்பிரிவு தாக்குதலை மேற்கொண்டது பின்னர் அங்கே நடந்த சம்பவங்கள் ஐக்காயந்டுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
வேலுப்பிள்ளை பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் ஏன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்?
‘சின்ன பாம்பு என்றாலும் விசம் இருக்கும்’- துரோகி கருணா
பாலச்சந்திரனை சுடச்சொன்னது “கருணாவே” என்று 53- ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 19.05.2009 அன்று சரியாக காலை 7. 15 மணிக்கு 53- ஆவது பிரிவின் படைகளிடம் சரணடைந்தார் பாலச்சந்திரன். இராணுவத்தின் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவின், முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 08 பேர் கொண்ட இராணுவ அணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவரது மெய்க்காவலர் இருவருடன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இவர்களோடு மேலும் மூவர் பாதுகாப்புக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அப்போது அங்கே நின்ற இராணுவத்திற்கு தெரியாது இவர்தான் தலைவர் வே.பிரபாகரனுடைய கடைசி மகன் பாலச்சந்திரன் என்று. அங்கே நின்ற சில துரோகிகளினால் அடையாளம் காட்டப்பட்டு பாலச்சந்திரனை தடுத்து வைத்தனர்.
இதன்போது லெப்.கேணல் அலுவிகார, அவரது 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்.கேணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு இவ்விடையத்தை அறிவித்துள்ளார். அங்கு இருந்த கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய, பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்ன இருக்கும் இடத்திற்க்கு அழைத்துச் சென்றுள்ளனர். கமல் குணரத்ன பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் சிறப்பு விசாரணைகளை நடத்தியுள்ளார்.
பின்னர் பாலச்சந்திரனிடம் பெறப்பட்ட தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.
பின்னர் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிடம் இவ்விடையம் சம்பந்தமாக தெரித்தபோது சரத்பொன்சேகா துரோகி கருணாவிடம் தெரிவித்தார். கருணா அப்போது சரத்பொன்சேகாவிடம் ஒன்றும் தெரிவிக்காமல் நேரடியாக கமல் குணரத்னவை தொடர்பு கொண்டு தெரிவித்த விடையம் “சின்ன பாம்பு என்றாலும் எதிர்காலத்தில் விசம் பெரிதாகியே இருக்கும் .இங்கே அனுப்பாதீர்கள் அங்கேயே புதைத்து விடுங்கள்” என்பதாகும். கருணா இவ்வாறு கூறக் காரணம் , அவன் வே.பிரபாகரன் அவர்களிடம் இருந்து பிரிந்து சென்று சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து கொண்ட ஒரு தளபதியாவான்.
அந்த கட்டளை கிடைக்கும் வரைக்கும் காத்திருந்த குணரத்னவும் சிப்பாய்களும் பாலச்சந்திரனுக்கு மாச்சில்லு (பிஷ்கேட்) கொடுத்து சாப்பிடும்படி அமர்த்தி வைத்ததிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. தன்னைவிடமாட்டார்கள் என்று தெரிந்த பாலச்சந்திரன் தன்னை எதிரி சுடப்போகின்றான் என்றும் தெரியும். அடுத்த ஒரு சில நொடிகளில் அப்பாலகன் உடம்பில் 5 சன்னங்கள் (bullet) பாய்ந்தன.
இவருடன் சேர்த்து இவரின் மெய்க்காவலர்கள் 5 பேரும் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. சிங்கள ராணுவம் போர்க்குற்றங்களுக்கான சான்றுகளை அழித்ததா?
யுத்தம் நிறைவு பெற்ற காலங்களில் விடுதலைப்புலிகளின் ஆயுத தளபாடங்களை கண்காட்சி பொருளாக வைத்து வேடிக்கை பார்த்தார்கள். அதன் பின்னர் இந்திய, பாகிஸ்தானிய, சீன, உக்ரேனிய, ரஷ்ய, பிரித்தானிய அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் புலிகளின் தொழில்நுட்ப அறிவின் வல்லமையை பார்த்து வியந்து போனார்கள். அதிசயப்பட்டார்கள். ஒரு வல்லரசு நாட்டையே விஞ்சும் அளவிற்கு தொழில்நுட்ப அறிவின் மேலாண்மை மிளிர்ந்தது.
புலிகளின் உண்மை நியாயப்பாட்டை உலகம் பெருமை பேசிய போது, புலிகளின் கண்காட்சி பொருட்களையும், போரின் சான்றுகளையும், போரின் தடய நிலங்களையும் அழித்து துப்பரவு செய்யும் துர்ப்பாக்கிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.
போர் முடிந்த பின்னரான காலப்பகுதியில் போர் உக்கிரமாக நடைபெற்ற பகுதிகளில் ஒன்றான முகமாலை, இத்தாவில், பளை முதலிய இடங்களிலூடான பாதையே யாழ் கண்டி வீதி A9 தர பாதை ஆகும். இருமருங்கிலும் பனை ஓலைகளோ, பனை மேற்பரப்பு வட்டுக்கள் இல்லாத மொட்டையான எரிந்த பனங் குற்றிகளே காணப்பட்டது. உலக அரங்கில் யுத்தக் குற்ற அதிர்வொலி ஒலித்த போது வீராப்பாகவும், யுத்தத்தின் வலி சுமந்த மொட்டையான பனங் குற்றிகள் அனைத்தும் இராணுவத்தினரால் “செயின்சோ” இயந்திரங்கள் கொண்டு அறுத்தெறிந்து அகற்றப்பட்டன.
அதன் பின்னர் சீன இராணுவத்தின் உதவி கொண்டு, யுத்தத்தின் போது சரணடைந்த பொதுமக்கள், போராளிகளை சுட்டு படுகொலை செய்த இடங்களில் மருத்துவ இரசாயனங்களை விசிறி போர் தடயங்களை அழித்தார்கள். சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்கு வருகை தரும் பட்சத்தில் இவ்வாறான இடங்களிற்கு செல்லக்கூடும் என்றும் சென்று கண்டுபிடித்து விட்டால் நாட்டிற்கு பெரும் அவமானம் ஆகி விடும் என்று தூரநோக்குடன் கருதி சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனித எலும்புகளை இத்துப் போக வைக்கும் இரசாயனங்களை தெளித்தார்கள்.
அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகளின் பிரபலமான நபர்கள் இருவருக்கு விச ஊசி கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். புலிகளின் பிரபலமான “பாடகர் சாந்தன்” என்பவர் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டு ஆறு மாத காலப்பகுதியில் மாரடைப்பு வந்து இறந்து விட்டார். புலிகளின் பிரபலமான அரசியல் பேச்சாளர் “தமிழினி” என்பவர் அரசினால் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டு ஆறுமாத காலத்தில் உடம்பு முழுவதும் சிறு சிறு கட்டிகள் உருவாகி மாரடைப்பு வந்து இறந்து விட்டார். இவர்கள் இருவரும் நாற்பத்தைந்து வயது கடக்கவில்லை என்பதும் தமிழராக பிறந்த கொடுமை என்றும் கிளிநொச்சியில் மக்கள் அழுது புலம்புகிறார்கள்.
இவை சாதாரண கிராமத்து தமிழ் மக்களுக்கு தெரிந்த சிறு விடயங்கள்தான். இதை விட நடந்த குற்றச்சாட்டு அழிப்புகள் ஏராளம்.
அத்துடன் காணாமல் போன மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்குகிறோம் என்று ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இந்த நிதியுதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய பொருளாதார நிலையில் ஒரு நேர உணவுக்கே போதாத உதவு தொகை ஆகிறது.
அதுமட்டுமின்றி போரில் ஈடுபட்டு பின்னர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் அனைவருக்கும் அரச பணியாளர்கள் என்ற கடிவாளம் போடப்பட்டுள்ளது. வறுமை காரணமாக அரச பணியாளர்களாக இணைப்பு செய்வதன் மூலம் அரசின் பிழையான செயற்பாடுகளை வெளிக்கொணர முடியாமலும், போரின் கைது செய்யப்பட்டு இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்தவர்களின் சாட்சியங்களை அழிப்பதற்கான சிறந்த செயற்பாட்டை அரசு முன்னெடுக்கிறது. வறுமை காரணமாக அரசின் சூழ்ச்சியில் அகப்பட்ட பன்னிரண்டாயிரம் முன்னாள் போராளிகள் கூட இன்றும் குறைந்த சம்பளத்தில் கஞ்சியும் கூழும் குடித்து வெளியில் சொல்ல முடியாத அவலத்துடன் வாழ்கையை கொண்டு நடத்துகிறர்கள். பாதிக்கப்பட்ட இத்தகைய மக்களுடன் கலந்துரையாடும் போது பெரும் வேதனையை தருகின்றது.
தொடர்வான்….
SHARE