பிரபாகரனையும், அவரது போராட்டத்தையும் இழிவுபடுத்த தமிழ்க்கட்சிகள் அருகதையற்றவர்கள்

463

தமிழினத்தின் விடுதலைக்காக ஆயுதமேந்திப்போராடியவர்களுள் தமிழீழவிடுதலைப்புலிகள் முதன்மை வகிக்கின்றனர். விடுதலைப்புலிகளின் போராட்டமானது படிப்படியாக வளர்ச்சிபெற்று, சர்வதேச சமூகங்களும் போற்றும் அளவிற்கு பரிணாமம் கண்டது. தமிழினத்தின் விடுதலைக்காக போராடப்புறப்பட்டவர்களின் வரிசையில் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், ஈரோஸ் போன்ற கட்சிகளும் உள்ளடக்கப்படுகின்றன.

MSRS102012 tna

இவர்களது ஆரம்பம் தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளுடனேயே அமைந்திருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ்க்காங்கிரஸ் போன்ற கட்சிகள் இவ்வாயுத அமைப்புக்கள் எல்லாவற்றையும் ஊக்கப்படுத்தியதாக அன்றையகாலம் அமைந்திருந்தது. இவ்வாறிருக்கின்றபொழுது, கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தை தூசுதட்டி தேர்தலில் போட்டியிடவேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு முன்னர் விடுதலைப்புலிகளது தலையீடுகள் காணப்பட்டமையின் காரணமாக தமிழரசுக்கட்சியினால் பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியா மால்போனது என இரா.சம்பந்தன் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தார். திம்பு கோட்பாடு, பண்டா-செல்வா ஒப்பந்தம், அதற்கு முன்னரான ஒப்பந்தங்கள் என அனைத்தும் கிழித்தெறியப்பட்டு செல்லாக்காசாக மாறிய வரலாறுகள் பதியப்பட்டிருக்கின்றன.

அப்போதைய தமிழ்த்தலைவர்கள் உரியமுறையில் குரல் எழுப்பியிருந்தால் தமிழினம் துன்பத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்காது. இன்று புராணக்கதைகளை பேசிக்கொண்டு, தனது கட்சியை மட்டும் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே தமிழரசுக்கட்சி செயற்பட்டு வருகின்றது. தமிழரசுக்கட்சியினரும் அக்கட்சியின் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்திப்பேசுவதை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
இன்று தமிழினம் இலங்கையில் ஓரளவேனும் தலைநிமிர்ந்து வாழ வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்தவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரனே ஆவார். ஒரு கட்டத்தில் அவரது போராட்டம் சர்வதேசமே ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மாற்றம்பெற்றிருந்தது. உலகிலேயே 38 பயங்கரவாத அமைப்புக்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் வித்தியாசமான முறையில் அமைந்திருந்தது. இப்போராட்டம் தொடர்ச்சியாக 30 வருடங்களாக இலங்கை அரசிற்கு எதிராகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சகோதரப் படுகொலைகள் பரவலாக கட்டவீழ்த்துவிடப்பட்டன.
இதற்கான காரணம் இந்தியாவின் தேசியப்பாதுகாப்பிற்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டமையேயாகும். அனைத்து ஆயுத இயக்கங்களுக்குள்ளும் விடுதலைப்புலிகளின் வளர்ச்சி யினைக் கண்ட இந்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு துரோகத்தினை விளைவித்தது.
திம்பு கோட்பாட்டினை கைவிடு மாறு இந்திய அரசினால் பிரபாகரனுக்கு வலியுறுத்தப்பட்டபோதிலும் அவர் அதனை மறுத்துவிட்டார். அவர் சுகபோக வாழ்வு வாழவேண்டும் என எண்ணியிருந்தால், அன்றே முதலமைச்சர் பதவியினைப்பெற்றிருக்கலாம். 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் சுதுமலையில் வைத்து பிரபா கரனை உலங்குவானூர்தியின் மூலம் இந்தியாவின் அசோகா ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றனர். பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் அந்த ஹோட்டலுக்குள் பிரபாகரன் உட்பட்ட குழுவினர் சிறைவைக்கப்பட்டனர். அதன்பின்னர் அவர் இந்திய அதிகாரிகளினால் அச்சுறுத்தப்பட்டார். ஆனாலும் அவர் இந்தியரசிற்கு கூறிய பதில், நான் உறவுகளில் அக்கறை இல்லாதவன். எந்தவொரு வீரனும் அவ்வாறுதான் போராடவேண்டும். நான் தமிழ் மக்களின் நலனுக்காகவே போராட புறப்பட்டவன். நானும் எனது குழந்தைகளும் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக நான் நாட்டு மக்களை ஏமாற்றிவிடக்கூடாது. தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு எதிராக நான் செயற்படுவேனாகவிருந்தால் என்னை எனது மெய்ப்பாதுகாவலனே சுட்டுக்கொல்லலாம் என்று அந்த இந்திய இராணுவக்கோட்டைக்குள் வலியுறுத்திச் சொன்னார்; பிரபாகரன்.

LTTE-Air8
பிரச்சினைகள் பூதாகரமாக இலங்கையில் உருவாகும் என்கின்ற காரணத்தினால் பிரபாகரன் மீண்டும் திருப்பியனுப்பப்பட்டார். இந்திய அரசு ஏமாற்றத்தினை ஏற்படுத்தியதன் விளைவு ராஜீவ்காந்தியின் கொலையுடன் நிறை வடைய வேண்டிய சூழ்நிலை உருவா னது. அதுமட்டுமல்லாது இந்திய இராணுவத்தை இந்நாட்டிலிருந்து வெளியேற்ற விடுதலைப்புலிகள் அயராது பாடுபட்டனர். ஆயுதம் மற்றும் அஹிம்சை வழியில் பிரபா கரனது தலைமையில் போராட்டங்கள் ஆரம்பமாகின. அக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்குத் தேவையான இராணுவ வளங்களை அக்காலத்தின் ஆட்சியாளரான ரணசிங்க பிரேமதாஸா அவர்களே வழங்கியிருந்தார். இதனால் இந்தியாவிற்கும், தமிழினத்திற்கும் இடையிலிருந்த தொப்புள்கொடி உறவு துண்டாடப்பட்டது.
ஆரம்பகாலகட்டங்களில் இயக்கத் திற்கு ஆயுத உதவிகளை வழங்கி, இலங்கையரசிற்கு எதிராக யுத்தத்தினை ஆரம்பிக்க உதவியாக இருந்த இந்தியரசு, பின்னர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டது. இச்சந்தர்ப்பத்தினை பிரேம தாஸா அவர்கள் தனக்குச் சாதகமாக நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார். எனது தந்தையே விடுதலைப்புலிகளின் போராட்டம் அழிவதற்கு முக்கிய காரண மாக இருந்தார் என இக்காலகட்டத்தில் இவரது மகன் சஜித் பிரேமதாஸா அவர்கள் கூறுகின்றார். இதுவும் ஒரு காரணமாகவிருந்தாலும், அதற்குப் பின்னரான காலகட்டத்தில் 2001ம் ஆண்டு தமிழ் மக்களுக்காக பாராளுமன்றம் சென்று அரசியல் ரீதியாகக் குரல்கொடுத்த அனைத்து ஆயுத இயக்கங்களும், அஹிம்சை ரீதியாக ஆரம்பமான கட்சிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்கின்ற கூட்டமைப்பாக உருவாக்கம் பெற்றது.
அதன்பின்னர் விடுதலைப்புலிகளின் தலையீட்டுடனேயே அல்லது அவர்களுடைய கூற்றின்படியே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்பட ஆரம்பித்தது. நிலைமைகள் இவ்வாறு தொடருமாகவிருந்தால் உலக நாடுகளுக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகும் என்ற காரணத்தினால், விடுதலைப்புலிகளின் போராட்டத்தினை அனைத்துநாடுகளும் எதிர்த்தன. அதற்கு முன்னர் அமெரிக்கா உட்பட 57 நாடுகளும், 22 அரசசார்பற்ற நிறுவனங்களும் விடுதலைப்புலிகளுக்கு தமது ஆதரவி னைத் தெரிவித்திருந்தபோதிலும் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் நேரடித்தலையீட்டின் காரணமாக, விடுதலைப்புலிகளை நேர டியாக அழித்தொழிக்கவேண்டும் எனத் திட்டமிடப்பட்டு, மாவிலாறில் ஆரம்பித்த யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது.

49I40044_30547_435

விடுதலைப்புலிகளினுடைய போராட் டத்தை மழுங்கடிப்புச்செய்தாலும் அவர்களுடைய செயற்பாடுகள் தொடர்ந்தும் அரசியல் ரீதியாக இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். அதன் பிற்பாடான செயற்பாடுகளை விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ போன்ற கட்சிகள் முன்னெடுத்துவந்தன. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கொள்கை களை ஏற்றுக்கொள்ளாமையின் காரண மாக ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலை மையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் பிரிந்துசென்றனர். தமிழர்களாக இவர்கள் இருந்துகொண்டும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை குறை கூறுபவர்களாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க, விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் இணைந்திருப்பதனால் புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இக்கட்சிகளில் தமிழரசுக்கட்சி ஆதிக்கம் செலுத்தி, தனது கட்சியை மட்டும் கூட்டமைப்பின் பெயரை பயன்படுத்தி வளர்த்து வருகின்றது. ஆனால் இத் தமிழ்த்தேசியக்கூட்டமைப் பிற்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் அதிகமாக காணப் படுவதன் காரணமாக, மேற் குறிப்பிடப்பட்ட கட்சிகள் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை அடிப்படையாகக்கொண்டு தமிழரசுக்கட்சியினர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் தேர்தல் காலங்களில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் போராட்டம், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என பிரபாகரன் கூறியவற்றைக் கூறி, வாக்குவங்கிகளை நிரப்பிக்கொண்டு, பின்னர் தமிழரசுக்கட்சி ஆயுதமேந்தாத கட்சி, பயங்கரவாதத்தினை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதல்ல என்ற கருத்துக்களை முன்வைப்பது வேடிக்கையானது. போராட்ட இயக்கங்களுக்கே இந்த நாட்டில் துணிந்து கருத்துக்களை வெளியிட அதிகாரமுண்டு. விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் ஒரு வரை இழந்திருக்க நேரிட்டிருக்கலாம். இதுவே உண்மை. ஏனைய கட்சியினர் மேற்கொண்டிருந்தாலும் அவர்களுக்கும் இந்நிலையே.
சர்வாதிகாரப்போக்கினை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்ததன் காரண மாகவே அவர்களது போராட்டம் தோல்வியினைத் தழுவிக்கொண்டது என சர்வதேச மட்டத்தில் உரத்துக் கூறிக்கொண்டிருக்கும் தமிழரசுக்கட்சியின் சம்பந்தன், சுமந்திரன் அங்கொன்றும் இங்கொன்றுமாக கருத்துக்களை வெளியிடுகின்ற செயற்பாடென்பது தமிழினத்தினை ஏமாற்றும் செயற்பாடாகவே அமையப்பெறுகின்றது.
காலத்தின் தேவைகருதி அரசாங்கத்தோடு இணைந்து செயற்படவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாகக்கூறி, இதன்மூலம் தமிழ்மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலைக்கு இவர்கள் வருகின்றனர். அதாவது தன்மானம் தேவையில்லை. தமிழ் மக்களுடைய அபிலாசைகளை மாத்திரம் பூர்த்தி செய்யவேண்டும் என்பதேயாகும். தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பது தற்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் கிடப் பில் போடப்பட்டதொன்றாகவே காணப் படுகின்றது. கட்சியின் ஒற்றுமையினை பலப்படுத்தவேண்டும் என்ற காரணத்தினால்தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இன்னமும் நாம் அங்கத்தவர்களாக இருக்கின்றோம் என ஏனைய கட்சிகள் கூறிவருகின்றன.

TNA-Leaders-5-party2-300x296 Vanni_MPs_Martyrs_3_405
இவ்வாறு இருந்துகொண்டு சம்பந்தனும் சுமந்திரனும் பிரபா கரனது போராட்டத்தினையும், அவரது செயற்பாடுகளையும் கொச்சைப்படுத்தி வருகின்ற செயலை தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. கட்சியில் உள்ளவர்கள் விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு ஏதோவொரு வகை யில் துரோகத்தினை இழைத்தவர்கள் என்றுதான் கூறவேண்டும். மக்களின் நல னில் அக்கறையுடன் செயற்படுகின்றோம் எனக்கூறிக்கொண்டு, உள்ளே மிருகம் வெளியே கடவுள் என்று செயற்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.தமிழினத்தைக்கண்டு சிங்கள தேசம் பயந்த வரலாறுகள் மாற்றப்பட்டு, இன்று தமிழருடைய பலம், பலவீனத்தினை எடைபோடும் அளவிற்கு காரணங்களாக அமைந்தவர்களும் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிப்போரே.
பிரபாகரனது வழியில், சிந்தனையில், நெறிப்படுத்தலில் இக்கட்சிகள் பயணிக்குமேயாகவிருந்தால் அதாவது ஆயுதம் அல்லது அஹிம்சைப்போராட்டம், தமிழ் மக்களது தீர்வுகள், அவர்கள் இம்மண்ணுக்காக சிந்திய இரத்தம் வீண்போகாது. பிரபாகரனைப்பொறுத்தவரையில் தற் கொலைப்படையை உருவாக்கி யிருக்கலாம். இனத்தினை காட்டிக்கொடுப்பவர்களை கொலைகள் செய்திருக்கலாம்.
அவையணைத்தும் தமிழ் மக்களின் எதிர்வரும் தலைமுறை யாவது நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. தனது சுயநலம் பாராமல் தாயக விடுதலைக்காக இறுதி நிமிடம் வரை போராடினார். அவர் சுகபோகமாக வாழ்ந்திருக்கமுடியும். ஏன் அவ்வாறான செயற்பாடுகளில் அவர் ஈடுபடவில்லை என்பதனை தமிழ் அரசியல்வாதிகள் சிந்தித்துப்பார்க்கவேண்டும். சர்வதேச ரீதியாக பிரபாகரனின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் எவ்வாறானது? ஆயுதப்போராட்டம் மௌனித்திருக்கும் நிலையிலும் தமிழ் மக்களின் மனதிலிருந்து பிரபாகரனின் போராட்டமும், நெறிப்படுத்தலும், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை மீதான பற்றும் மக்களால் மறுக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காகவேதான் தமிழ்மக்கள் த.தே.கூட்டமைப்பினை ஏற்றுக்கொண்டு, ஒற்றுமையாக செயற்படுகின்றனர் என்பதனை தமிழரசுக்கட்சி புரிந்துகொள்ளவேண்டும்.  ஆனால் தமிழரசுக்கட்சி கூறுவதைப்போன்று ஆயுதக்கட்சிகளை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டால் ஆசனங்கள் கிடைக்காது. அந்த நிலையில்தான் எம்முடன் இன்றும் இணைந்திருக்கின்றனர் என்கின்ற கருத்து தவறானது. இதிலொரு விடயம் சுட்டிக்காட்டப்படவேண்டும். மண் மீட்கும் யுத்தத்திற்காக புறப்பட்ட அனைத்து ஆயுதக்கட்சிகளுடைய ஆரம்பமும் ஒரே குறிக்கோளில்தான் இருந்தது. இடையில் மாற்றம் பெறக் காரணம் சகோதரப்படுகொலையே. இவையணைத்தையும் தற்பொழுது மறந்தே த.தே.கூட்டமைப்பாக இணைந்து செயற்பட்டுவருகின்றார்கள். இதனைக் கருத்திற்கொண்டு மீண்டும் எமது போராட்டத்தையும் இனத்தையும் கட்சிகளையும் குற்றஞ்சாட்டுவதென்பது தவறானவிடயம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

– இரணியன் –

 

SHARE