இறுதி யுத்தம் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தி 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இலங்கை முழுவதும் ஒரு பரபரப்பான செய்தியாக வெளியானது.
அதாவது கடந்த 30 ஆண்டுகளாக வடகிழக்கில் நிலவி வந்த விடுதலைப் புலிகளின் யுத்தம் முடிவடைந்து விட்டது. புலிகளின் தலைவர் உயிரோடு சிங்கள இராணுவத்தால் பிடிக்கப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்;பட்டு அவரது தலையை வெட்டி கொல்லப்பட்டார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது.
அதற்கு ஏற்றால் போல் புலிகளின் தலவர் பிரபாகரனின் இறந்து போன சடலம் சிங்கள தேசத்தின் தொலைக் காட்சியில் காண்பிக்கப்பட்டது. சிங்கள தேசம் மகிழ்ச்சி ஆரவாரத்தில் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தது.
சிங்கள தேசத்தின் இராணுவப் படையினரால் காண்பிக்கப்பட்ட பிரபாகரனின் சடலத்தை புலிகளின் முன்னாள் சிரேஷ்ட பிரிகேடியர் கருணா அம்மான் பார்வையிட்டு ஊர்ஜிதம் செய்தார். அப்போது கருணாவுக்கு இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று மஹிந்த தரப்பால் சொல்லப்பட்டது என்று பரவலான இரகசியக் கதைகள் உள்ளது என்பது வேறு கதை.
நாடு முழுவதும் அரச தொலைக்காட்சியில் புலிகளின் தலைவரின் சடலம் என்று காண்பிக்கப்பட்ட சடலத்தை இராணுவம் மறுதினம் வடக்கில் புதைத்து விட்டார்களாம்.
அப்போது அரசாங்கம் காட்டிய புலிகளின் தலைவரின் சடலத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை சாதாரண மக்கள் தொட்டு ஆய்வாளர்கள் வரை பெருத்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கின்றது. இன்னும் அது வளர்ந்து கொண்டே வருகின்றது.
ஆனால் இந்தச் சந்தேகம் ஊடக ஆய்வாளர்கள் மத்தியில் பரவிய போது அரசாங்கம் எழுதப்படாத சட்டம் ஒன்றை உடன் அப்போது அமுலுக்குக் கொண்டு வந்தது.
அதாவது புலிகளின் தலைவர் பற்றியோ அவர் உயிருடன் இருப்தாகவோ அல்லது அரசு காண்பித்த சடலம் பொய்யானது என்றோ அல்லது அது பற்றிய விவாதங்களை யாராவது நடத்துவது அல்லது கதை பரப்புவது குற்றம் என்பதுடன் யாராவது இந்தச் சந்தேகங்களை உண்டாக்குவது கண்டறியப்பட்டால் உடன் கைது செய்யப்படுவார்கள். இப்படியாக ஒரு சட்டத்தை உடன் அரசு அப்போது கொண்டு வந்தது.
அத்துடன் இந்தச் சந்தேகம் மக்களிடத்தில் இருந்து மறையும் வரை அரசு தனது உளவுப்படையை உஷார்படுத்தி வடகிழக்கில் யாராவது இந்தச் சந்தேகத்தை உருவாக்கி விவாதம் நடத்துகின்றார்களா என்று பொது மக்கள் கண்காணிக்கப்பட்டார்கள்.
அதனால் பொது மக்கள் இந்தச் சந்தேகம் பற்றியோ அல்லது புலிகளின் தலைவரின் இறப்பில் இன்னும் இருந்து வருகின்ற சந்தேகம் பற்றியோ வாய்திறக்க முடியாத அளவுக்கு மக்கள் அடக்கப்பட்டிருந்தார்கள்.
ஆனால் அப்போது மறந்து போன புலிகளின் தலைவர் இறப்பு பற்றிய சந்தேகத்தை இப்போது அரசு தானாகவே கொண்டு வந்துள்ளது.
அப்போது புலிகளின் தலைவரின் கைத்துப்பாக்கி மற்றும் அவரது இலக்கம் அதாவது புலிகளின் இலக்கம் பொறிக்கப்பட்ட தகடு அட்டை மற்றும் அவரது இடுப்புபட்டி ஆகியன அவரது சடலத்துடன் கண்டு பிடிக்கப்பட்டதாக அரசு தனது தொலைக்காட்சி மூலமாக காட்டியது.
இப்போதைய சர்ச்சை
இந்த துப்பாக்கி சம்பந்தமான சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது. அதாவது அரசால் காட்டப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி மற்றும் இலக்கத் தகடு போன்றவற்றை நாங்கள் கைப்பற்றவில்லை என்று தற்போது இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
பிரபாகரனும் துப்பாக்கியும் இணைபிரியாதவை. துப்பாக்கி இல்லாமல் பிரபாகரன் உடல் காட்டிய போது பலரின் சந்தேகம் உருவானது. ஆனால் யாராலும் அந்தச் சந்தேகத்தை பகிரங்கமாகவோ அல்லது ஊடகங்களில் எழுதவோ முடியாமல் போனது. அந்தளவு இந்த விடயத்தில் அரசின் அச்சுறுத்தல் இருந்தது.
ஆனால் தற்போது அந்த அச்சுறுத்தல் சற்றுக் குறைந்துள்ளது என்பதற்கு அப்பால் சற்று மறந்து போன விடயத்தை அரசின் இராணுவப் பேச்சாளர் ஞாபகப்படுத்தியுள்ளார். அதாவது மஹிந்த ஆட்சியில் கைப்பற்றியதாகச் சொல்லப்படும் பிரபாகரனின் துப்பாக்கி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் பிரபாகரனின் கைத்தப்பாக்கி. இலக்கத் தகடு மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை நாங்கள் கண்டதில்லை என்று அண்மையில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டது.
பிரபாகரனின் துப்பாக்கி என்பது குளக் வகைத் துப்பாக்கியாகும். மிகவும் சக்தி வாய்ந்த கைத்துப்பாக்கியாகும். மிகவும் துல்லியமிக்க அந்தத் துப்பாக்கியானது கருங்கல்லைக் கூட துளைக்குமென சொல்லப்படுகின்றது.
இந்த துப்பாக்கி இஸ்ரவேல் நாட்டின் தயாரிப்பாகும். இந்தத் துப்பாக்கிகளையே மொஷாட் உளவு அதிகாரிகள் கடந்த காலங்களில் தங்களது பாதுகாப்புக்காக பயன்படுத்தி வந்தார்கள்.
அப்படியானால் அரசு காண்பித்த பிரபாகரனின் சடலம் பெய்யானதா என்ற கேள்வி மக்களிடம் இருப்பது நியாயம்தானே. அரசு காண்பித்த அந்தச் சடலம் பொய்யா அப்படியானால் புலிகளின் தலைவர் இன்னும் எங்கோ உயிருடன் இருக்கின்றாரா?
அரசாங்கமே சொல்கின்றது புலிகளின் உளவுத் தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாகவோ அல்லது அவர் சடலமாக மீடகப்படதாகவே இல்லையென்றும் அவர் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையென்றும் சொல்லப்படுகின்றது. புலிகள் இயக்கத்தின் ஆணிவேர் மூலவேர் பொட்டு அம்மான். அந்த பொட்டு அம்மானை இன்னும் இந்தியா தேடுகின்றது.
அந்த வகையில்தான் இன்னும் வடக்கு கிழக்கில் இந்திய றோ வின் உளவுப் படை அதிகாரிகள் புடவை வியாபாரிகள் கோலத்தில் இன்னும் புலிகள் பற்றிய உளவுத் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அப்படியானால் இந்தியாவின் புலிகள் அழிப்பு அல்லது ஒழிப்பு பற்றிய இலக்கில் இந்தியா தோல்வி கண்டுள்ளதா? இன்னும் எதற்காக இந்தியா புலிகள் பற்றிய உளவு வேலைகளை வடக்கு கிழக்கில் முடுக்கிவிட வேண்டும். அப்படியானால் இந்தியா குறி வைத்த புலிகளின் தலைமைகள் தப்பி விட்டதா என்ற கேள்வி பலமாகத்தான் உள்ளது.
அண்மையில் ஐ.தே.க. தலைவர் ரணில் தேர்தல் பரப்புரையொன்றில் பேசும் போது மஹிந்தவை வெல்ல வைக்க பிரபாகரன் நாட்டில் இல்லையாம் என்கின்றார். அப்படியானால் பிரபாகரன் இன்னும் வெளிநாட்டில் உயிருடன் இருக்கின்றாரா? என்ற சந்தேகம் நியாயமானதுதானே.
பிரபாகரன் இறந்து விடவில்லை என்று ரணில் சொல்லவில்லையே. நாட்டில் இல்லை என்றுதான் சொல்லுகின்றார்.
மீண்டும் சர்ச்சை
தற்போது மீண்டும் பிரபாகரனின் மரணத்தில் சர்ச்சை கிளம்கியுள்ளது.
புலிகளின் முன்னாள் பிரிகேடியர் கருணா அம்மான் தமிழக தொலைக்காட்சி சனலுக்கு வழங்கிய பேட்டியொன்றில் பிரபாகரனை இலங்க இராணுவம் கொல்லவில்லையென்றும் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சொல்லியிருந்தார்.
கருணாவின் கூற்றுக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இல்லை பிரபாகரன் இராணுவத்தின் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகித்தான் மரணித்தார் என்கின்றார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசுடன் மிகவும் நெருக்கமாக விசேடமாக மஹிந்த கம்பனியுடன் மிகவும் அன்னியோன்னியமாக இருந்த கருணாவுக்கு இதன் உண்மை நிலை என்னவென்று நன்றாகவே தெரியும்.
கருணா சொல்வது பொய் என்று சரத் பொன்சேகா சொல்லுவது சரியென்றால் ஏற்புடையது என்றால் சரத் பொன்சேகா சொல்லுவதும் பொய்தான். அப்படியானால் இருவர்; சொல்லுவதும் பொய்தான்.
கருணா, மஹிந்த கம்பனி மீது கொண்ட வெறுப்பினால் அப்படிச் சொன்னாலும், சிங்கள ராணுவம் பீரங்கித் தாக்குதல் மூலமாகக் கொன்று விட்டது என்று பெருமையாகச் சொன்னாலும் இந்த விடயத்தில் மர்மம் நிறைந்துள்ளது. காரணம் இருவரும் சொல்வது பொய் என்கின்ற போது உண்மையொன்று இதில் புதைந்துள்ளது என்றுதானே அர்த்தப்படும்.
அந்த வகையில் பார்ப்போமானால், இந்திய றோ உளவாளிகள் இன்னும் வடகிழக்கில் புடவை வியாபாரிகள் கோலத்தில் உளவு வேலைகள் பார்ப்பதும் இந்திய அரசுக்கு பிரபாகரன் பற்றிய மரணப்பதிவு இன்னும் இலங்கை அரசு வழங்காமல் இருப்பதும் மேலும் மர்மத்தை ஊர்ஜிதமாக்கியுள்ளது.
மற்றும் புலிகளின் தலைவர் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா பற்றி சரத் பொன்சேகா தெரிவிக்கும் போது அவர்கள் இருவரும் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சொல்லுகின்றார். ஆனால் இந்திய றோ வேறு விதமாகச் சொல்லுகின்றது.
மேலும் பொட்டு அம்மான் என்கின்ற புலிகளின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பின் தலைவர் இறந்ததற்கான ஆதாரம் இன்னும் இலங்கை அரசிடம் இல்லை. அவர் இறந்தது பற்றிய தகவல் இல்லையென்று சரத் பொன்சேகாவும் சொல்லியுள்ளார்.
ஆனால் இறுதிச் சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் ஒரு செய்தி புலிகளால் புலிகளின் வாக்கிடோக்கி மூலமாக இராணுவத்தினால் ஒற்றுக் கேட்கப்பட்டதாக அப்போது ஒரு செய்தி கசிந்தது.
அதாவது புலிகளின் தலைவர் பிரபாகரன் கிழக்கிற்கு தப்பிப் போகப் போகின்றார் என்ற செய்தியொன்று கசிய விடப்பட்டிருந்தது. ஆனால் அது பொய்யான செய்தியாகவும் படைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காவும் புலிகளால் அப்படியான செய்தியொன்று மிகவும் தந்திரமாக கசிய விடப்பட்டிருந்தது.
அந்த நாட்களில் முல்லைத்தீவு கடல்பகுதியில் மிகவும் உக்கிரமான சண்டையொன்று நடைபெற்றது. இதற்கு மேல் சொல்ல முடியாது.
பிரபாகரனின் அண்ணன் மனோகரன்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடன் பிறந்த அண்ணன் மனோகரன் மிக நீண்ட காலங்களாக டென்மார்க்கில் வாழ்ந்து வருகின்றார். அவரது கருத்தின்படி இவர்களது தகப்பன் வேலுப்பிள்ளையின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
காரணம் இறுதி யுத்தத்தின் போது வேலுப்பிள்ளை யுத்த பிரதேசங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் “நோ பயர் சோன்” பகுதிகளில் மாறி மாறி வாழ்ந்துள்ளார்.
இறுதி யுத்தம் முடிந்த பின்பு இரண்டொரு மாதம் கடந்த பின்புதான் மர்மமான முறையில் இந்த வேலுப்பிள்ளை இறந்து போனார். காரணம் மக்களுடன் மக்களாக இருந்த வேலுப்பிள்ளையை படைத் தரப்பினரால் இனம் காண முடியாமல் போனது. பின்னர்தான் அவர் புலிகளின் தலைவரின் தகப்பன் என கண்டு கொண்டார்கள்.
அதன் பின்னர்தான் வேலுப்பிள்ளை இறந்து போனார் என்று அறிவிக்கப்பட்டது. அதனால்தான் அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனோகரன் சொல்கின்றார்.
அத்துடன் தனது தம்பி பிரபாகரன் பற்றிய தகவலும் காலம் வரும் போது தெரிவிப்பதாக சொல்லியுள்ளார். இப்படியாக மர்மம் நிறைந்துள்ளது.
புலிகள் மீள எழ முடியுமா?
சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த அணி அண்மையில் பரப்பி விட்ட செய்தி புலிகள் மீள எழுச்சி பெற்று வரவுள்ளார்கள். வடக்கில் புலிக்கொடி பறக்கும் என்று ஒரு பூச்சாண்டி காட்டப்பட்து. அவைகள் எல்லாமே பொய்.
புலிகளின் தலைவர் உயிரோடு இருந்தாலும் புலிகள் மீள் வருகை என்பது மிகவும் கடினமானது. காரணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களில் இராணுவம் பாரிய முகாம்களை அமைத்துள்ளது.
ஆக மொத்தத்தில் புலிகள் மீண்டும் ஒன்று கூடுவது என்பதும் வடகிழக்கில் மீண்டும் புலிகள் ஏதாவது ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருப்து என்பதும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
வடகிழக்கில் இராணுவத்தினால் மக்களும் மக்கள் வாழும் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. வீணான வதந்திகள் மூலமாக புலிகள் மீள் வருகின்றார்கள் என்று சில இணையதளங்கள் மூலமாக செய்தி வெளியிடுகின்றார்கள்.
புலிகளின் தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்பது வேறு வகையான சந்தேகமும் மர்மமும் நிறைந்த கேள்வி. ஆனால் புலிகள் மீள் வருகை என்பது வடகிழக்கில் எந்த வகையிலும் சாத்தியமில்லை என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் புலம் பெயர்வாழ் சிலர் இஸ்ரவேலுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திச் செல்வதால் எதிர்காலத்தில் ஒரு விமானச் சண்டையை விமானத் தாக்குதலை இலங்கை எதிர் கொள்ளலாம்.
அது கூட எங்கேயோ ஒரு நாட்டில் இருந்து வந்துதான் அந்த விமானத் தாக்குதலைச் செய்து விட்டுச் செல்ல முடியுமேயொழிய இலங்கைக்குள்ளிருந்து செய்ய முடியாது.
இப்படிப்பட்ட நிலையில் புலிகள் மீள்வருகை என்பது வெறும் அம்புலி மாமா கதைதான். தலைவர் இருப்பதா இல்லையா என்பது வேறு விடயம்.. ஆனால் புலிகள் மீண்டும் வடகிழக்கில் எழுச்சி பெறுவது என்பது மிகவும் கடினமானது.
இவ்வளவு மக்கள் அழிந்த பின்பு எந்த இளைஞனும் ஆயுத இயக்கத்தில் இணைந்து கொள்வது என்பது சாத்தியமாகாது என்பதை நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
சர்வஜன வாக்கெடுப்பை நோக்கிய பயணம்
தற்போது நாம் ஜெனீவாவை நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இலங்கை போர்க் குற்றங்கள் பற்றிய போதிய ஆதாரங்கள் சாட்சிகள் ஐ.நா வுக்கு இல்லையாம் என்ற முக்கிய தகவல் ஒன்று எமக்குக் கிடைத்துள்ளது. அதனால் தமிழர் போராட்டம் இன்னும் நீண்டு கொண்டே போகின்றது..
ஆனால் புலம்பெயர் மக்களோ அல்லது அமைப்புக்களோ இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் சிவிலியன் தாக்குதல்கள் குடிமக்கள் மீதான கொலைக் குற்றம் தடை செய்யப்பட்ட குண்டுகள் போட்டு மக்களை அழித்தது போன்ற குற்றங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வருகின்றார்கள்.
இதன் காரணமாக இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு நீதியை நோக்கி அல்லது தீர்ப்பை நோக்கிய பயணம் வெற்றியளிக்குமானால் இந்தோனேஷியாவில் இருந்து பிரிந்த கிழக்குத் தீமோர் மற்றும் சூடானில் இருந்து பிரிந்த தெற்கு சூடான் போன்று ஐ.நா. வின் சர்வஜன வாக்கெடுப்பொன்று இங்கு வட கிழக்கில் நிச்சயம் நடைபெறலாம்.
ஆனால் அந்த வாக்கெடுப்பில் வட கிழக்கு முஸ்லிம்களும் சிங்களவர்களும் பிரிவினைக்கு எதிராக இணந்து வாக்களிப்பார்கள். ஆனால் இந்த வாக்கெடுப்பில் முஸ்லிம் சிங்கள மக்களின் வாக்குகள் தேவைப்படாது. அவர்களின் வாக்குகள் இல்லாமலே சர்வஜன வாக்கெடுப்பு வெற்றி பெறும்..
காரணம் உலகம் முழுவதும் பரந்து வாழும் 10 லட்சம் புலம்பெயர் தமிழர்கள் இந்த வாக்கெடுப்புக்கு தகுதியானவர்கள். அதனால் வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியே வாக்கெடுப்பு வெற்றி பெறும்.
வட கிழக்கில் ஐ.நா. வின் சர்வஜன வாக்கெடுப்பு என்று வந்தால் எங்கெல்லாம் ஈழத் தமிழன் வாழ்கின்றானோ அங்கெல்லாம் ஐ.நா.வாக்குப் பெட்டியை வைத்து வாக்கெடுப்பு நடத் வேண்டும்.
ஆதலால் வட கிழக்கு முஸ்லிம் சிங்களவர்களின் எதிர்த்து வாக்களிப்பு என்பது எவ்விதமான பாதிப்பையும் செய்யாது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
இந்த இலக்கை நோக்கிய பயணம் நீண்ட காலம் எடுத்தாலும் ஒரு நாள் வெற்றியடையும்..