பிரம்டனில், நபர் ஒருவரை வாகனத்தில் மோதி படுகாயமடையச் செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரம்டனின் ஜூலியானா சதுக்கத்திற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விசாரணைகளின் அடிப்படையில் பிரம்டனைச் சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.