பிரிகேடியர் சு.ப தமிழ் செல்வன் எம் தேசத்தின் சொத்து பேச்சுவார்த்தை எனக்கூறி திட்டமிட்டு கொன்றனர்

695

 

தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்த ஒரு தலைவர் ஆவார்.


தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் வே.பிரபாகரன் தமிழகத்திலிருந்து ஈழம் வருவதற்கு முன் ஈழத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் வே. பிரபாகரனுடன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தமிழ்ச்செல்வன் அண்ணாவினை ஒரு சிறந்த அரசியல் ஆற்றல் மிக்க தலைவராகவே பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் ஈழ வரலாற்றில் தமிழ்செல்வன் அண்ணாவின் வீச்சானது வெறும் அரசியல் களத்தோடு முடிந்து போய்விடவில்லை. அரசியலையும் தாண்டி சமர்க்களங்களில் தமிழ்செல்வன் அண்ணாவின் பங்களிப்பு என்பது அளப்பெரியது.

1987 – 1989 வரை யாழ் தென்மராட்சி பகுதியில் இந்திய இராணுவத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல்.

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கை (ஆனையிறவு இலங்கை இராணுவ முகாம் வலிந்த தாக்குதல்) இந்த நடவடிக்கையின் பொது நெஞ்சில் காயமடைந்தார்

1992 இல் இலங்கைப் படையினரின் “பலவேகய – 02” எதிர்ச்சமரிலும்

தச்சன்காடு இலங்கைப் படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல்

1991 இல் மன்னார் சிலாபத்துறை இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993 நடவடிக்கையில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் காயமடைந்தார்.

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.போன்ற சமர்களங்கள் தமிழ்செல்வன் அண்ணாவின் வீரத்துக்கு சான்றாக என்றைக்கும் வரலாற்றில் நிலைக்கும்.

1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து தலைவர் அவர்களால்அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்

புலிகளின் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் புலிகளின் அதிஉச்ச அரசியல் தலைவர் ஆனார்.

தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களுக்கு , அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருக்கின்றனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் முதன் முதலில்
பிரிகேடியர் என்ற தரநிலையைப் பெற்றவர் தமிழ் செல்வன் அண்ணா அவர்களே

2007, நவம்பர் 2 காலை ஆறு மணயளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்.

060103_6 1381210_496475377116421_1902526286_n karuna-eelanasam3 lrg-1453-dsc_20433

SHARE