பிரிட்டிஷ்காரரின் பார்வையில் அழகிய Connaught Place: அரிய வகை வீடியோ

475

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மிகவும் அழகாக இருந்த Connaught Place என்ற இடத்தின் அரிய வகை வீடியோ காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள Connaught Place என்ற இடம், 1938 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், கம்பீர கட்டிடங்கள் எழுந்து நிற்க, எவ்வித ஆரவாரமும் இன்றி மிகவும் அமைதியாக காட்சியளிக்கிறது.

பழமை நிலை மாறி வரும் இடங்களில் இந்த இடமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த இடம் பார்ப்பதற்கு கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.

அதிகமான ஷோ ரூம்கள், காபி ஷொப்கள், அதிக மக்கள் கூட்டம், 10 கார் பார்க்கிங் இடங்கள், நூற்றுக்கணக்கான கார்கள் என அன்று அமைதியாக இருந்த இடம் இன்று ஆர்ப்பரிக்கும் இடமாக மாறியுள்ளது.

ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கார்கள் இல்லை, போக்குவரத்து இடர்பாடு இல்லை, கூட்டம் இல்லை. மாறாக வெள்ளை நிற கட்டிடங்கள் மட்டுமே எழுந்து நிற்கின்றன.

இதோ அதன் அரியவகை வீடியோ

SHARE