பிரியாணி சாப்பிட கடைக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! 46 பேர் உயிரிழப்பு

80

 

வங்களாதேசத்தில் உள்ள அடிக்குமாடி கட்டிடம் ஒன்றில் இயங்கிவரும் ஒரு பிரியாணி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் வங்களாதேசம் தலைநகர் டாக்காவில் பெய்லி சாலையில் 7 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகங்கள், உணவகங்கள், செல்போன் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள பிரியாணி கடையில் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பிரியாணி கடையில் பற்றிய தீ அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தளத்திற்கு மளமளவென பரவ தொடங்கியுள்ளது.தீ விபத்தின் போது அடுக்குமாடி கட்டிடத்தில் மேல்தளத்தில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்து தொடர்பில் தவலறிந்த பொலிஸார், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

எனினும், தீ விபத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்தாகவும், 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பிரியாணி கடையில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

SHARE