தென் அமெரிக்க நாடான பிரேசிலில் செர்ஜிப் மாகான தலைநகரான அட்வகோடோ ஐசிந்தோ பில்கோவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க உறவினர்களும், பார்வையாளர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த சந்தர்பபத்தை பயன்படுத்திய கைதிகள் பார்வையாளர்கள் மற்றும் சிறை காவலர்கள் உள்பட 122 பேரை பிணை கைதிகளாக பிடித்து சிறை வைத்தனர்.
அதை தொடர்ந்து சிறைக்குள் நுழைந்த போலீசார் கலவரத்தை அடக்கி அமைதிப்படுத்தினர். மேலும், பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்த கைதிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த தகவலை சிறையின் செய்தி தொடர்பாளர் சாண்ட்ரா மேலோ தெரிவித்துள்ளார்.