பிலிப் ஹியூக்ஸ் உடலுக்கு வீரர்கள் அவர்களது குடும்பத்தினர், ரசிகர்கள் அஞ்சலி

374

சிட்னி,நவ.28 (டி.என்.எஸ்) பிலிப் ஹியூக்ஸ் உடலுக்கு வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. சிட்னி மைதானத்தில் வெளியே பிலிப் ஹியூக்ஸ் படம் வைக்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். சிலர் கண்ணீர்விட்டு அழுதனர்.

அவரது இறுதி ஊர்வலத்தில் கிரிக்கெட் வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள். இன்று நடக்கும் இலங்கை– இங்கிலாந்து அணிகள் மோதும் 2–வது ஒருநாள் போட்டியின் போது பிலிப் ஹியூக்சுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

SHARE