பிலியந்தல பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

196

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் பிலியந்தல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரதியான பகுதியில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் மதுபான போத்தல்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்படடவர் கரதியான பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனவும் அவரிடமிருந்து 45 மதுபான போத்தல் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE