பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு காரணம் யார்? கசிந்த தகவல்

562
மைக்ரோசொப்ட் அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு யார் காரணம் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.பில்கேட்ஸ் 20 வருடங்களுக்கு முன்னர் மைக்கேல் லார்சன் (Michel Larson) என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார். அப்போது, பில்கேட்ஸின் சொத்து மதிப்பு வெறும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்தான்.

ஆனால், சுறுசுறுப்பும், கணிப்பு திறனும் இயற்கையாகவே கொண்ட லார்சன், பில்கேட்ஸின் சொந்த முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தை உச்சிக்கு கொண்டு சென்றார்.

ஒருநேரத்தில், பில்கேட்ஸின் சொத்து மைக்ரோசொப்டை மட்டுமே நம்பியிருந்தது.‘

ஆனால், லார்சனின் திறமையால் முதலீட்டு நிறுவனத்தில் வருமானம் கணிசமாக அதிகரித்தது. அதில் வந்த வருமானத்தை லார்சன் புத்திசாலித்தனமாக டெக்னாலஜியில் மட்டுமே முதலீடு செய்து வந்த முறையை மாற்றி ரியல் எஸ்டேட், கனடியன் ரெயில்வே கம்பெனி, ஆட்டோ நேஷன், ரிபப்ளிக் சர்வீஸஸ் போன்றவற்றில் முதலீடு செய்து பணத்தை பெருக்கினார்.

அந்த பணமே இன்று பில்கேட்ஸின் அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது.

இன்று பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

SHARE