பிஷ்வாலுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

638

Nisha_CI
தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வாலுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இன்றைய தினம் அமெரிக்காவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகைள மீளவும் தூண்டும் முனைப்புக்களில் புலம்பெயர் அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்து இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புக்களையும் தனிப்பட்ட நபர்களையும் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம், நல்லிணக்கம் போன்ற விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, பிஷ்வால், அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுடனும் பிரிதொரு சந்திப்பினை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றதாக அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்ப அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் பிஷ்வால், ஜாலியவை சந்திக்க உள்ளார்.

SHARE