பீட்ஸா பிரியர்களுக்கான அதிரடி வசதி

260

இன்றைய காலகட்டமானது இணையம் இன்றி அணுவும் அசையாது என்ற நிலமைக்கு வந்துவிட்டது. அந்த அளவிற்கு அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கின்றது இணையம்.

அதே போலவே இணையத்தளத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கும் தொழில் துறைகளை விளம்பரப்படுத்த முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

இவற்றின் வரிசையில் தற்போது பேஸ்புக் மெசஞ்சரின் ஊடாக டொமினோஸ் பீட்ஸாவை ஆர்டர் செய்யக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ் வசதியானது பீட்ஸா பிரியர்களுக்கு நிச்சியம் ஒரு குதூகலமான செய்தியாகவே இருக்கும்.

பீட்ஸா புரொபைலில் நுழைந்து ஒன்லைனில் பணம் செலுத்தி ஆர்டர் செய்ய முடியும்.

அல்லது டொமினோஸ் என பேஸ்புக் மெசஞ்சரில் தேடி தோன்றும் புரொபைலின் ஊடாகவும் இலகுவாக ஆர்டர் செய்ய முடியும்.

எனினும் இவ் வசதி முதன் முறையாக அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கவுள்ளது.

எனினும் வெகு விரைவில் ஏனைய நாடுகளிலும் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE