புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்

376

 

யாழ். புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உறவினர் வீடுகளை புங்குடுதீவில் மக்கள் அடித்து நொருக்கி தீயிட்டுள்ளனர்.

இன்றைய தினம் காலை புங்குடுதீவில் உள்ள இரு சந்தேக நபர்களின் வீடுகளையும், சந்தேக நபர்களில் ஒருவரின் நண்பர் வீட்டையும் மக்கள் அடித்து நொருக்கியுள்ளதுடன், நேற்றைய தினம் கைதான சந்தேக நபர்களில் ஒருவருடைய மற்றொரு நண்பரை பொதுமக்கள் வாளால் வெட்டியுள்ளனர்.

இதில் எஸ்.தினேஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

மேலும் வீடுகள் தாக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர்களின் குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட 5 சந்தேக நபர்களை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ  பரிசோதனைக்காக கொண்டு செல்லும் போது பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவை கொலை செய்த சந்தேக நபர்களை மருத்துவ ஆய்வு செய்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட போது திடீரென மக்கள் திரண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

SHARE