புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க பெண் அரசியல்வாதியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.- காணொளிகள்

335

 

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க பெண் அரசியல்வாதியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வித்தியா, கொலை செய்யப்பட்ட பின்னர் பிரதான சந்தேகநபரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து பின்னர் பொலிஸில் ஒப்படைக்கவிருந்தனர்.

எனினும் குறித்த பெண் அரசியல்வாதி தலையிட்டு தாம் குறித்த சந்தேகநபரை பொலிஸில் ஒப்படைப்பதாக கூறி கையேற்றுள்ளார்.

இது தொடர்பிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்களில் ஒருவர் கொழும்புக்கு தப்பி செல்ல பொலிஸ் தரப்பில் ஒத்துழைப்பு இருந்ததா? என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவிஸ் காமுகனுக்காக மக்களுடன் போராடிய வியஜகலா 

SHARE