புதிய அவதாரம்-விஜய் சேதுபதி.

467

சினிமாவில் நடிக்க வரும் அனைத்து நடிகர்களும் வித்தியாசமான கதையிலும், கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்று கூறிவருவார்கள்.

அப்படி சொல்பவர்கள் எல்லாம் தைரியமாக செய்தவில்லை. ஆனால் விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வெற்றி பெற்று ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறார்.

அந்த வரிசையில் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் எடுத்திருக்கும் வேடத்தை பார்க்கும் போது என்ன இதுவா விஜய் சேதுபதி என்று பகீரென்று ஆகிறது.

55 வயதான நோயாளியாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. தான் ஒரு ஹீரோ என்பதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் கதையின் நாயகனாக மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பு வேலையோடு, வசனமும் எழுதுகிறாராம்

 

SHARE