புதிய கலாசாரத்துக்கு எதிரான படம் 

412


புதிய கலாசாரத்துக்கு எதிராக உருவாகிறது ‘யாவும் காதலே.இதுபற்றி இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறியது:பெரியவர்கள் நிச்சயம் செய்து திருமணம் செய்வது பாரம்பரிய கலாசாரம். இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. திருமணத்துக்கு முன்பே ஒன்றாய் வாழ்ந்து பார்ப்பது. பிடித்திருந்தால் திருமணம் இல்லாவிட்டால் பிரிந்துவிடுவது என்று கலாசாரம் சீரழிந்து கிடக்கிறது. இது சமுதாயத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை காமெடியுடன் விமர்சிக்கும் கதைதான் இது. சுப்பு ஹீரோ. ரஞ்சனா மிஸ்ரா, சிம்மிதாஸ் ஹீரோயின். கதைக்கு தேவை என்பதால் பிரெஞ்சு நடிகை காத்ரின் ஜாக்சன் புதுமுகமாக அறிமுகமாகிறார். எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவு. வல்லவன் இசை. சங்கர், எம்.ஜெய், ரசிக்குட்டி தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் கேரளா, மும்பை தாண்டி இப்போது வெளிநாடுகளில் ஹீரோயின் தேடுகிறார்கள் கோலிவுட் இயக்குனர்கள். இக்கதைக்கு அவசியம் தேவை என்பதால் பிரெஞ்சு நடிகை காத்ரின் ஜாக்சனை அறிமுகம் செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்

 

SHARE