தாய்வானை தளமாகக் கொண்டு இயங்கும் HTC நிறுவனமானது இலத்திரனியல் சாதனங்களுக்கு பெயர் பெற்ற நிறுவனமாகும்.
குறிப்பாக உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி புதிய சாதனம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இச் சாதனம் என்ன என்பதை வழமைக்கு மாறாக இரகசியமாக வைத்துள்ளது.
இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் “Unexpected surprise” எனும் எழுத்துடன் புகைப்படம் ஒன்றினை பிரசுரம் செய்துள்ளது.
இதேவேளை கடந்த மாதம் U Ultra மற்றும் U Play எனும் இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவற்றின் விலைகள் இந்திய பெறுமதியில் முறையே 59,990 ரூபா, 39,990 ரூபா ஆகக் காணப்படுகின்றது.