புதிய தலைமைத்துவம் ஒன்றினை உருவாக்கினால் மட்டுமே நாட்டினை ஜனநாயகத்தின் பக்கம் திருப்ப முடியும் – தலைவர் அனுரகுமார திசாநாயக

222

பிரதான இரண்டு கட்சிகளையும் வீழ்த்தும் புதிய தலைமைத்துவம் ஒன்றினை உருவாக்கினால் மட்டுமே நாட்டினை ஜனநாயகத்தின் பக்கம் திருப்ப முடியும். புதிய கூட்டணியை உருவாக்க ஜே.வி.பி தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

தேர்தல் குறித்து சகல கட்சிகளும் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் அது குறித்தும் நாட்டின் அண்மைக்கால நிலைமைகள் குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாட்டினை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்தி பலமான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது கருத்தாக உள்ளது. ஆனால் பொதுத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்ற கருத்தும் அரசியல் கட்சிகள் மத்தியில் உள்ளது. எவ்வாறு இருப்பினும் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு சென்று மக்கள் தீர்மானம் ஒன்றினை சுயமாக முன்னெடுக்க இடம் வழங்கப்பட வேண்டும். பொதுத் தேத்தல் நடத்தாது போனால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் நாம் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி .பியும் தனித்து களமிறங்கும். நாம் மக்கள் நிலையம் ஒன்றினை அமைத்து மாற்றத்தை உருவாக்கும் சகல மக்களையும் ஒன்றிணைத்து தேர்தலில் களமிறங்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE