Samsung நிறுவனம் TST (Turbo Speed Technology) எனும் தொழில்நுட்பத்தை தனது புதிய ஸ்மார்ட் போன்களில் புகுத்த உள்ளது.
சமீபத்தில் அறிமுகமான J2 Pro ஸ்மார்ட் போனில் இந்த தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொழிநுட்பம் மூலம் ஆப்ஸ்களால் போன் மெதுவாவதை தடுக்க முடியும்.
இதன் மூலம் RAM அளவை அதிகரித்து போனை 40 சதவீதம் வரை போனை வேகமாக வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் இந்த தொழிநுட்பத்தை இனி வெளியிடும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கொண்டு வரப் போவதாக Samsung நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை தெளிவாக விளக்கும் வீடியோ ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.