புதிய தொழில் தொடங்கியுள்ள பிரபல சீரியல் நடிகை சாய் காயத்ரி

75

 

சாய் காயத்ரி, சென்னையில் பிரபல கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கிறார், அப்போதே பல சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்து வந்துள்ளார்.

ஜெயா டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி என தொகுப்பாளினியாக வலம் வந்தவர் பின்பு சின்னத்திரை நடிகையாக களமிறங்கியுள்ளார்.

2011ம் ஆண்டு விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கியவர் பின் சிவா மனசுல சன்தி தொடரில் நடித்தார், பின் ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் என நடித்து வந்தவர் இப்போது நீ நான் காதல் என்ற தொடரில் நடிக்கிறார்.

புதிய தொழில்
சாய் காயத்ரி நடிப்பை தாண்டி சொந்தமாக ஹேர் ஆயில் தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார். சின்னதாக வீட்டிலேயே செய்துவந்தவர் தற்போது ஒரு கம்பெனியாக தொடங்கியுள்ளார்.

கம்பெனியின் பூஜை போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட அவருக்கு மக்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

SHARE