புதிய தோற்றத்தில் Royal Enfield Hunter 350.., அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரம் இதோ

118

 

ரெட்ரோ தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள Royal Enfield Hunter 350 பைக்கின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவலை பார்க்கலாம்.

Royal Enfield Hunter 350
பைக்குகள் விற்பனையில் Royal Enfield பைக்குகள் பிரபலமாக உள்ளன. இந்த நிறுவனம் சில காலத்திற்கு முன்பு Royal Enfield Hunter 350 பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது ரெட்ரோ தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமான இந்த பைக்கில் சக்திவாய்ந்த engine மற்றும் நவீன அம்சங்கள் உள்ளன. இந்த பைக்கானது தோற்றத்திற்காவே பலராலும் விரும்பப்படுகிறது. இந்த பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 349.34 cc engine இருப்பதால் 20.4 bhp அதிகபட்ச திறன் மற்றும் 27 Nm அதிகபட்ச முறுக்குவிசையை உருவாக்கலாம்.

மேலும், பைக்கின் செயல்திறனுக்காக 5-வேக gearbox பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 36.2 கிலோமீட்டர் / லிட்டர் மைலேஜை வழங்குகிறது. பைக்கின் பாதுகாப்பில் கவனம் செலுத்திய நிறுவனம் நவீன பிரேக்கிங் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது.

இந்த பைக்கின் விலையை பொறுத்தவரை தொடக்க விலையாக 1.50 லட்ச ரூபாய்க்கு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல இந்த பிரிவில் இருக்கும் டாப் வேரியண்டிற்கு 1.75 லட்ச ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SHARE