புதிய முயற்சியில் யூடியூப்

453
வீடியோ கோப்புக்களை பகிரும் வசதியை தரும் பிரபல தளமான யூடியூப் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.அதாவது தற்போது வீடியோ கோப்பு ஒன்றினை பார்வையிடும் போது காட்சிகளை ஒரே கோணத்தில் மட்டுமே பார்வையிட முடியும்.

ஆனால் புதிய வசதியின் படி ஒரு காட்சியினை பல கோணங்களில் பார்வையிடக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட கமெராக்களைக் கொண்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பல கமெராக்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

எனினும் தற்போது இவ்வசதியின் பீட்டா பதிப்பே அறிமுகம் செய்யப்படவுள்ளது.

SHARE