புதிய மைல்கல்லை எட்டியது கூகுளின் ஜிமெயில் சேவை

335
இணைய உலகின் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் மின்னஞ்சல் சேவை ஜிமெயில் ஆகும்.இம் மின்னஞ்சல் சேவையே இன்று உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் இச் சேவையையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1 பில்லியனிலும் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த எண்ணிக்கை நாளாந்தமா அல்லது மாதாந்தமா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த ஜிமெயில் சேவை 2004ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் குறுகிய காலத்தில் ஏனைய மின்னஞ்சல் சேவைகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளதுடன், இம் மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தியே அன்ரோயிட் மொபைல் இயங்குதளம், யூடியூப், கூகுள் மேப் போன்ற அப்பிளிக்கேஷன்கள் கையாளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE