புதிய மைல்கல்லை எட்டியது இன்ஸ்டாகிராம்!

153

புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பவற்றினை நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து மகிழும் வசதியை இன்ஸ்டாகிராம் தருகின்றது.

பலமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு முன்னணி சமூகவலைத்தளமாக திகழும் இன்ஸ்டாகிராம் தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அதாவது தற்போது 600 மில்லியன் பயனர்களை எட்டி சாதனை படைத்துள்ளது.

இதில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 100 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளனர்.

அண்மையில் இன்ஸ்டாகிராம் சில புதிய வசதிகளை அறிமுகம் செய்திருந்தது.

இதன் காரணமாகவே சடுதியான முறையில் 6 மாதங்களில் புதிதாக 100 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாள்தோறும் 300 மில்லியன் பயனர்கள் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE