புதிய வசதிகளுடன் அறிமுகமான பிளேட் S7 கைப்பேசி

355
ZTE நிறுவனம் பிளேட் S7 என்ற புதிய ஸ்மார்ட்கைப்பேசியை ஷாங்காயில் அறிமுகப்படுத்தியுள்ளது.பிளேட் S7 ஸ்மார்ட்கைப்பேசி முதலில் தாய்லாந்தில் விற்பனைக்கு செல்லும் என்றும், பின்னர் ஆசிய-பசிபிக் முழுவதும் உள்ள மற்ற சந்தைகளில் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த ஸ்மாட்கைப்பேசியின் சிறப்பம்சமாக முன் மற்றும் பின்புற கமெராவில் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது. முன் கமெராவில் ஃபேஸ் டிடெக்‌ஷன் ஆட்டோஃபோகஸ், பனோரமா மற்றும் 14 வெவ்வேறு அழகுபடுத்தல் விருப்பங்கள் ஆதரிக்கிறது.

பின்புற கமெராவில் ஆட்டோ சூட்டிங் மோட், செலக்டிவ் ஃபோகஸ் மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ் ஆகியவை உள்ளடக்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்கைப்பேசி லெமன் க்ரீன், ரோஸ் கோல்டு, டைமண்ட் ஒயிட் மற்றும் ஸ்பேஸ் கிரே போன்ற வண்ண வகைகளில் வருகிறது.

ZTE பிளேட் S7 ஸ்மார்ட்கைப்பேசி திருத்தியமைக்கப்பட்ட MiFavor 3.2 UI அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது.

மேலும், 445ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு ஹச்டி LTPS டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

இந்த ஸ்மார்ட்கைப்பேசி 3ஜிபி DDR3 ரேம் உடன் இணைந்து 64பிட் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின் மற்றும் முன் எதிர்கொள்ளும் கமெரா கொண்டுள்ளது.

மேலும், இணைப்பு வசதிகளாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், 3ஜி, ஜிஎஸ்எம், 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவற்றை வழங்குகிறது.

SHARE