புதிய வடிவமைப்பு, கமெராவுடன் ஈர்க்கவுள்ள புதிய OnePlus 13., கசிந்துள்ள தகவல்கள்

611

 

OnePlus 12-இன் தொடர்ச்சியான OnePlus 13 ஓன்லைனில் கசிந்துள்ளது.

இந்த சாதனம் புதிய வடிவமைப்பு மற்றும் Camera அப்டேட்டுடன் வரும் என்று கூறப்படுகிறது.

கசிந்துள்ள விவரங்களின்படி, கமெரா தொகுதியிலும், வடிவமைப்பிலும் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் கிளப் வெளியிட்ட பதிவில், வரவிருக்கும் OnePlus 13 புதுப்பிக்கப்பட்ட Camera மாதிரி வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

OnePlus 12 தொடரில் காணப்படும் வடிவமைப்பைப் போல் இல்லாமல், OnePlus 13 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வடிவமைப்புடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போன் 50 MP Primary Camera மற்றும் 6x Optical Zoom கொண்ட 50 MP Periscope camera போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

கூடுதலாக, OnePlus 13 Qualcomm Next Gen chip Snapdragon 8 Gen 4 சிப்செட்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus 13 ஆனது 2K Screen மற்றும் Ultrasonic Finger Print Sensor கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE