புதுக்குடியிருப்பின் வளர்ச்சியும் அதன் மகிழ்ச்சியும் எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் எமது கெளரவ வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராஜா

324

 

புதுக்குடியிருப்பின் வளர்ச்சியும் அதன் மகிழ்ச்சியும் எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் எமது கெளரவ வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராஜா மேடம்

அவர்களின் புதுக்குடியிருப்பு வருகையை முன்னிட்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகள் என பெரும் திரளான மக்கள் எமது கெளரவ வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராஜா மேடம் அவர்களை வரவேற்று தமது பிரச்சனைகள் சம்மந்தமாக எடுத்துக் கூறப்பட்டது .அதற்கு கெளரவ பாராளுமன்றம் உறுப்பினர் சாந்தி மேடம் அவர்கள் இது சம்மந்தமாக தான் வடமாகாண ஆளுநர் அவர்களிடம் எடுத்துக் கூறியதாகவும் அதற்கான பதிலாக எதிர்வரும் தை மாதம் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தீர்வு பெற்றுத் தருவதாகவும் அதற்க்கு அனைவரின் விபரத்தையும் உடன் தருமாறும் கூறினார். அதனை அடுத்து மக்கள் சந்திப்பும் அவர்களின் கோரிக்கை தொடர்பான சாதகமான பதில்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேலை வாய்ப்பு சம்மந்தமாகவும் கலந்தாலோசிக்காப்பட்டு அதற்கான சரியான தீர்வுகள் பெற்று தருவதாக கூறப்பட்டது. தற்போது தேர்தலில் நேருக்குவதால் வேலைவாய்ப்பை உடனடியாக பெற்றுத்தரமுடியாத இக்கட்டான சூழ்நிலை உள்ளதாக எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து மந்துவில் மாதர்சங்கம் மற்றும் ஞான ஒளி சனசமூக நிலைய தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் அங்கத்தினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தவிர முன்னாள் போராளி அதாவது மாற்றுத்திறனாளியான சிவனேசன் அவர்களையும் அவரின் இல்லத்தில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உடனடியாக செயற்படும் வண்ணம் உதவிபுரியவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மாற்றுத்திறனாளியின் துயர்துடைக்க அவரின் இல்லம் தேடிச்சென்ற வன்னியின் இரும்புப் பெண்மணி கெளரவ சாந்தி சிறிஸ்காந்தராஜா அம்மா என்றால் மிகையாகாது..வாழ்த்துகள் சகோதரி..உங்கள் சேவை என்றும் எங்கள் மக்களுக்கு தேவை என்று கூறுவதில் பெருமையடைகிறோம்..வாழ்த்துகள் வாழ்த்துகள் மேடம்..

SHARE