நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்திற்கு ரசிகர்கள் ஏராளம். சில நாட்கள் முன்பு சென்னை வெற்றி திரையரங்கில் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பிரமாண்ட ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என கேட்டுவந்த ரசிகர்களுக்கு ஒருவழியாக தற்போது பதில் கிடைத்துள்ளது. புதுப்பேட்டை 2க்கான திரைக்கதை எழுதும் பணி நடந்துவருவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய அவர் “இரண்டாம் பாகம் எடுக்கும்போது அது முதல் பாகத்திற்கு நியாயம் செய்யவேண்டும். மேலும் கொக்கு குமார் கதாபாத்திரத்திற்கும் நியாயம் செய்யவேண்டும். அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தற்போது அதற்கான திரைக்கதை எழுதும் பணிகள் நடந்துவருகிறது” என கூறியுள்ளார்.