புத்தம் புதிய வடிவமைப்புடன் LinkedIn இணையத்தளம்

191

வேலைவாய்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சமூக வலைத்தளமே LinkedIn ஆகும்.

கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இயங்கும் இவ் வலைத்தளத்தில் இன்று பல மில்லியன் கணக்கானவர்கள் கணக்கினை வைத்துள்ளனர்.

இவர்கள் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இப்படியிருக்கையில் டெக்ஸ்டாப் கணினிகளில் பயன்படுத்தப்படும் இணையத்தளத்தின் பக்கத்தினை புதிய வடிவமைப்பில் மெருகூட்டி அறிமுகம் செய்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இம் மாற்றம் தற்போது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இம் மாற்றத்தில் புதிய தொழில்நுட்பங்கள் உட்பட, கவர்ச்சிகரமான வடிவமைப்பு, இலகுவாக பயன்படுத்தக்கூடிய தன்மை என்பன புகுத்தப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

SHARE